நான் சொல்றவரைக்கும் வெயிட் பண்ணுங்க.. தயவுசெஞ்சி சொல்லிடாதீங்க.. போறபோக்கில் வலைப்பேச்சை கலாய்த்துவிட்ட RJ பாலாஜி..!

By Soundarya on கார்த்திகை 17, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். மாபெரும் பட்ஜெட்டில் உருவான கங்குவா திரைப்படம் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் ஆகிய நிலையில் படம் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

   

இதனையடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஒரு பாடத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அந்தமான், ஊட்டி, கேரளா, சென்னை உள்ளிட்ட இடங்களில் சூர்யா 44 வது பட சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டது. சூர்யாவின் 45 ஆவது இந்த திரைப்படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்குகிறார். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

   

 

யாரும் எதிர்பார்க்காத காம்போ இணைந்துள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. முன்னதாக இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியான போஸ்டரில் அரிவாள், வேல் என ஆன்மிகம், ஆக்‌ஷனுக்கான குறியீடுகள் இடம்பெற்றது. அத்துடன் குதிரை போன்ற உருவமும் இடம்பெற்றுள்ளது. இதனால் இந்த படம் என்ன மாதிரியான ஜானரில் உருவாக போகிறது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி, “சூர்யா 45″தலைப்பு ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளது. அது அதிகாரப்பூர்வமாக வரும் வரை அதை வெளியிட வேண்டாம் என்று வலைப்பேச்சு டீமை கேட்டுக்கொள்கிறேன் என்று கிண்டலாக பேசியுள்ளார்.