சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்டோர் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சண்டைக் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இயக்கியுள்ள நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் குறித்து தான் எங்கு பேசினாலும் பெரும் நம்பிக்கையோடு பேசி வந்தார்.

இதனை பலரும் ஓவர் பில்டப்பாக பார்த்த நிலையில் படம் 2000 கோடிகளை அசால்டாக வசூல் செய்யும் என்றும் படம் ஹாலிவுட் தரத்திற்கு உள்ளது எனவும் கூறினார்கள். பாலிவுட்டில் இந்த படத்தை மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறார்கள். சூர்யா இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் இந்த திரைப்படம் தான் உருவாகியுள்ளது என ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து படத்திற்கு பில்டப் கொடுத்து வந்தனர். சென்னை தொடங்கி மலேசியா வரை படத்தின் ப்ரோமோஷன் நடைபெற்றது.

இப்படி பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் பார்த்த பலரும் படத்தில் அதிக சத்தம் இருப்பதாக விமர்சித்தனர். இந்த நிலையில் கங்குவா படம் குறித்து சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கங்குவா படத்தில் முதல் அரை மணி நேரம் கண்டிப்பாக அந்த சத்தம் காரணமாக ரசிகர்களிடம் சென்று சேரவில்லை. ஆனால் கண்டிப்பாக சிறந்த அனுபவம். இது போன்ற ஒரு ஒளிப்பதிவை தமிழ் சினிமா இதுவரை பார்த்திருக்காது. சமூக வலைத்தளங்களில் எதிர்மறை விமர்சனங்கள் வந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

படத்தின் முதல் காட்சி முடியும் முன்னரே எதிர்மறை விமர்சனம் வந்தது. முதல் நாளிலேயே இவ்வளவு விமர்சனங்களை பரப்பியது வேதனை அளிக்கிறது. பல குழுக்களால் இணைந்து கங்குவா படத்திற்கு எதிராக விமர்சனத்தை பரப்பி வருகின்றனர். சமீபத்தில் வெளியான பெரிய பட்ஜெட் படங்களில் பெண்களுக்கு எதிரான வசனங்கள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தது. அந்த அளவுக்கு இவர்கள் நெகட்டிவான விமர்சனத்தை கொடுக்கவில்லை. கங்குவாவின் நேர்மறைகள் பற்றி ஏன் யாரும் பேசவில்லை. கங்குவா பெருமையாக இருங்கள். எதிர்மறையாக கருத்து தெரிவிப்பவர்கள் சினிமாவை உயர்த்துவதற்கு வேறு எதுவும் செய்யவில்லை என்று ஜோதிகா பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவை இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
