நெகட்டிவ் விமர்சனங்களுக்கு சத்தமில்லாமல் பதிலடி கொடுத்த சூர்யா.. கங்குவா 3 நாள் வசூல் விவரம்..!

By Nanthini on கார்த்திகை 17, 2024

Spread the love

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்டோர் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சண்டைக் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இயக்கியுள்ள நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோசனை ஒரு மாதத்திற்கு முன்னர் இருந்து படக்குழு தொடங்கிவிட்டது.

Oscar Winner Resul Pookutty Slams Suriya's Kanguva Movie : தலைவலி; கங்குவா படத்தை சரமாரியாக விமர்சித்த ஆஸ்கர் நாயகன்

   

அது மட்டுமல்லாமல் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் குறித்து தான் எங்கு பேசினாலும் பெரும் நம்பிக்கையோடு பேசி வந்தார். இதனை பலரும் ஓவர் பில்டப்பாக பார்த்த நிலையில் படம் 2000 கோடிகளை அசால்டாக வசூல் செய்யும் என்றும் படம் ஹாலிவுட் தரத்திற்கு உள்ளது எனவும் கூறினார்கள். பாலிவுட்டில் இந்த படத்தை மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறார்கள். சூர்யா இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் இந்த திரைப்படம் தான் உருவாகியுள்ளது என ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து படத்திற்கு பில்டப் கொடுத்து வந்தனர். சென்னை தொடங்கி மலேசியா வரை படத்தின் ப்ரோமோஷன் நடைபெற்றது.

   

Kanguva: RRR கேமரா யூனிட்; புது வேடம் சூர்யாவின் `கங்குவா' படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!| Five Interesting Secrets About Suriya Starrer 'Kanguva' - Vikatan

 

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. சூர்யா கொடுத்த பில்டப்பை நம்பி படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. பலரும் படம் குறித்து விமர்சனம் செய்த நிலையில் கங்குவா திரைப்படம் சுமார் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.

கங்குவா' படம் வெளியாவதில் சிக்கல்: உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! | kanguva movie release in controversy - kamadenu tamil

இந்தத் திரைப்படம் இரண்டு நாட்களில் 89.32 கோடி வசூல் செய்துள்ளதாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் மூன்றாவது நாளான நேற்று 12 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் உலக அளவில் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் முடிவில் ஒட்டுமொத்த கங்குவா திரைப்படம் 101 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இரண்டாவது வாரமும் படம் ஓடினால் 150 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.