இந்து மத வழிபாட்டில் பூஜை புனஸ்காரங்கள் செய்வது வழக்கம். ஒவ்வொரு கடவுள்களுக்கும் ஒவ்வொரு முறையாக பூஜை செய்வார்கள். அப்படி பூஜிக்கும் போது கடவுள்களுக்கு தீர்த்தம் மற்றும் பிரசாதம் படைத்து வணங்குவது வழக்கம். இந்த தீர்த்தம் பிரசாதம் கடவுளுக்கு வைப்பது ஏன் அதன் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

கடவுள் எல்லா பக்கமும் நிறைந்திருக்கிறார். அதேபோல் நீரிலும் கடவுள் இருப்பார் என்பது பொருள். அதனால்தான் பூஜையின் போது ஒரு சிறிய செம்பு பாத்திரத்தில் வைகை கங்கை தாமிரபரணி என புனித நீரை நிரப்பி வைப்பார்கள். இப்படி புனித நீர் இல்லாதவர்கள் நிறைகுடத்து நீரை அதில் வைக்கலாம்.
ஒரு செம்பு அல்லது பித்தளை பாத்திரத்தில் நீரை எடுத்துக்கொண்டு மனதார பூஜையில் இஷ்ட தெய்வத்தை அந்த நீரில் எழுந்தருள செய்ய வேண்டும். நம் பூஜை செய்யும் போது கடவுள் அந்த நீரில் வருவார் என்பது ஐதீகம். அதற்குப் பிறகு அது தீர்த்தமாக மாறுகிறது முடிந்தவுடன் பக்தர்கள் அந்த நீரை பருகலாம்.
அதற்கு அடுத்ததாக பூஜையின் போது வைக்கக்கூடிய முக்கியமானது பிரசாதம். கடவுள்களை ‘ப்ர’ என்ற சொல்லால் அழைக்கிறார்கள். கடவுள்களுக்கு படைக்கக்கூடிய சாதம் ஆனது ‘ப்ர’ என்ற சொல்லோடு சேர்ந்து பிரசாதம் என்றானது. முந்தைய காலங்களில் கடவுள்களுக்கு சாதம் வைத்து படைத்திருக்கிறார்கள். காலப்போக்கில் அது சர்க்கரைப் பொங்கல் பாயாசம் என மாறி இருக்கிறது.

ஒரு சிலர் தினமும் நாம் ஏதாவது ஒரு பிரசாதம் தயாரிக்க முடியலையே என்று நினைப்பவர்கள் குறைந்தபட்சம் கற்கண்டு ஒரு இனிப்பு பொரிகடலை போன்றவைகளையும் பிரசாதமாக படைக்கலாம். இந்த தீர்த்தம் மற்றும் பிரசாதம் வைத்து பூஜை செய்யும்போது தான் அந்த பூஜை முழுமையடையும். நாம் நினைத்த காரியம் நிறைவேறும். கடவுள்களும் தங்களுடைய முழுமையான அருளாசியை நமக்கு புரிவார்கள் என்பது ஐதீகம்.
