நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் மற்றும் காதல் உருவானது குறித்தான ஆவண படத்தை நெட்பிலிக்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த ஆவணப்படம் சில தனிப்பட்ட காரணங்களால் தள்ளிப் போனது. அதாவது நானும் ரவுடிதான் திரைப்படத்தின் இயக்குனராக விக்னேஷ் சிவன் இருந்த நிலையில் நயன்தாரா படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்திற்கு பிறகு தான் இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு திருமணம் செய்து கொண்டனர். அதிலிருந்து சில காட்சிகளை இந்த ஆவணப்படத்தில் வைக்க திட்டமிட்டிருந்த நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தனக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.

‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்திய காரணத்துக்காக நயன்தாராவுக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். அதன் எதிரொலியாக நயன்தாரா இன்று பகிரங்கமாக தனுஷை நேரடியாக தாக்கி மூன்று பக்க லெட்டர் ஒன்றை எழுதி இருந்தார். இதனைத் தொடர்ந்து நயன்தாராவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இப்படியான நிலையில் நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தனுஷை விமர்சிக்கும் வகையில் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில், வாழுங்க.. வாழ விடுங்க என தனுஷ் பேசியது இடம்பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் அவர் அனுப்பிய நோட்டீசும் அதில் இடம் பெற்றுள்ளது. வாழு..வாழ விடு, அன்பை பரப்புங்கள், ஓம் நமசிவாய. இதையெல்லாம் நம்பும் உண்மையான ரசிகர்களுக்காகவும் அடுத்தவரின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சி காணும் வகையில் மாற வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று விக்னேஷ் சிவன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சர்ச்சைக்குள்ளான அந்தக் காட்சியையும் பகிர்ந்து, “இந்த சிறிய காட்சிக்குத்தான் ரூ.10கோடி கேட்டார்கள். அதை இங்கே இலவசமாகவே பகிர்கிறேன் நீங்களே பாருங்கள். அன்பைப் பரப்புங்க சார்” என்று தனுஷை மறைமுகமாகச் சாடியுள்ளார். தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
