mgr

வாலி எழுதிய தேறாத பாட்டை ஹிட்டாக்கிய MGR… எதையும் சாதிக்கும் வல்லமை படைத்தவர் புரட்சி தலைவர்…

By admin on கார்த்திகை 16, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்கள் இடம் பிடித்தவர் MGR. அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி தனக்கான தனி இடத்தை பிடித்தவர் MGR.

   

குடும்ப உரிமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த MGR பின்னர் நடிகராக உயர்ந்தார். எம்ஜிஆரின் படங்கள் என்றாலே சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர்.

   

எம்ஜிஆர் படம் வெளிவந்தாலே ஹிட் தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார். அதனால் தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார் MGR .

 

எம்ஜிஆர் நல்ல மனிதர் மட்டுமல்ல வாரி கொடுக்கும் வள்ளல் உதவும் மனப்பான்மை கொண்டவர். பல ஏழை எளிய மக்களுக்கும் சினிமாவில் இருக்கும் நபர்களுக்கும் வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுத்தவர் எம்ஜிஆர். அதில் ஒருவர் தான் கவிஞர் வாலி.

தமிழ் சினிமாவில் உச்சத்தில் கண்ணதாசன் இருந்த நேரத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர்தான் கவிஞர் வாலி. கவிஞர் வாலி சினிமாவில் பாடல் எழுதுவதற்கு முன்பாக பல கவிதைகளை எழுதி இருக்கிறார். ஆனால் அதை எதுவுமே பாட்டாக உருவெடுக்க எந்த இசையமைப்பாளரும் ஒத்துக்கொள்ளவில்லை. அவர் எழுதிய பாடல்கள் எல்லாமே தேறாது என்று கூறியிருக்கின்றனர். அப்போதுதான் எம்ஜிஆரின் படகோட்டி படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்திருக்கிறது.

படபிடிப்பு இடைவேளையில் எம்ஜிஆர் வாலியிடம் பேசிக் கொண்டிருந்தபோது நீங்கள் சினிமாவில் பாடல் எழுதுவதற்கு முன்பே ஏதேனும் கவிதைகள் எழுதி இருக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு வாலி ஆம் நிறைய எழுதி இருக்கிறேன் என்று கூறி எழுதிய நோட்டுகளை காட்டி இருக்கிறார். அதில் ஒரு பாட்டை எடுத்து எம்ஜிஆர் இது நன்றாக இருக்கிறது இதை நாம் படத்திற்கு வைக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

உடனே வாலி வேண்டாம் ஐயா நிறைய இசையமைப்பாளர்களிடம் இதை நான் காட்டிவிட்டேன் யாருமே இந்த பாட்டு தேராது என்று கூறிவிட்டனர் என்று கூறி இருக்கிறார். உடனே இது கண்டிப்பாக ஹிட் ஆகும் என்று கூறி படகோட்டி படத்தில் அந்த பாடலை இடம்பெறச் செய்து தனது நடிப்பினால் ஹிட் ஆகவும் ஆக்கியிருக்கிறார் எம்ஜிஆர். அந்த பாடல் தான் கொடுத்ததெல்லாம் கொடுத்தார் என்ற பாடல்.