இறப்பதற்கு முன் கடைசியா அப்பா பேசின வார்த்தை.. இப்போதான் வருத்தமா இருக்கு.. டெல்லி கணேஷ் மகன் எமோஷனல்..!

By Nanthini on கார்த்திகை 15, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் தான் டெல்லி கணேஷ். முதலில் விமானப்படையில் பணியாற்றி வந்த இவர் மேடை நாடகங்கள் மீது உள்ள காதலின் காரணமாக தன்னுடைய பணியில் இருந்து விலகி டெல்லியை சேர்ந்த ஒரு நாடக சபாவின் சார்பாக பல நாடகங்களில் நடித்தார். பிறகு 1976 ஆம் ஆண்டு வெளியான பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படம் மூலமாக தான் கலை உலக பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் வில்லன், காமெடியன் மற்றும் குணச்சித்திரம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியவர். இவருக்கு மகாதேவன் என்ற மகன் உள்ள நிலையில் தன் மகனை வைத்து கூட டெல்லி கணேஷ் ஒரு திரைப்படத்தை தயாரித்து இருந்தார்.

Latest News Famous Tamil Actor Delhi Ganesh Passes Away Read Unknown Facts  And Young Age Photos Of Him | டெல்லி கணேஷ் நடிகராவதற்கு முன் என்ன வேலை  செய்தார் தெரியுமா யாரும் அறியா உண்மை ...

   

இந்த நிலையில் கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருக்கும்போதே டெல்லி கணேசனின் உயிர் பிரிந்தது. அவருடைய மறைவு தமிழ் திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் தன்னுடைய அப்பா குறித்து மகாதேவன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில், என்னோட அப்பா என்ன வச்சு படம் பண்ணது உண்மைதான். படத்துக்கு சரியான தியேட்டர் எதுவும் கிடைக்கல. எல்லோரும் என்னால மூன்று கோடி லாஸ் ஆச்சு 6 கோடி லாஸ் ஆச்சு என்று பேசிட்டு இருக்காங்க.

   

Delhi Ganesh sathabhishekam: நடிகர் டெல்லி கணேஷுக்கு நடந்த சதாபிஷேகம்  வைரலாகும் போட்டோஸ்!

 

கடனுக்காக எங்க அப்பா வீட்டை வித்துட்டாங்கன்னு போய் வதந்தி கிளப்புறாங்க. அப்போது எங்க அப்பா சொல்ல வந்தது அது கிடையாது. எல்லோரும் எங்க அப்பாவுக்கு நஷ்டத்தால தான் இப்படி ஆச்சுன்னு சொல்றாங்க. அவருக்கு உண்மையாகவே இருந்த கஷ்டம் அந்த படம் மக்களை போய் சேராதது மட்டும்தான். எங்க அப்பா நான் நல்லா வரணும்னு தான் ஆசைப்பட்டாரு. பண விஷயத்துல உண்மை என்னன்னு எங்க அப்பாவுக்கு தெரியும் எனக்கும் தெரியும் என் கூட பொறந்தவங்களுக்கும் தெரியும். என்னால தான் எங்க அப்பா உயிர் போச்சுன்னு சொல்றாங்க. என்னை நினைத்துதான் எங்க அப்பாவுக்கு இப்படி ஆச்சுன்னு சொல்றது உண்மை இல்லை.

திடீரென்று இப்படி... எதிர்பார்க்கவே இல்ல.. எங்களுக்கு கஷ்டம்தான்” டெல்லி  கணேஷின் மகன் / Maha Delhi Ganesh about his father Actor Delhi Ganesh demise

நம்ம புள்ள மேல இப்படி ஒரு பழியை போட்டுட்டாங்கன்னு எங்க அப்பா இப்பதான் வருத்தப்படுவாரு. எங்க அப்பாவின் மரணம் நாங்க எதிர்பார்க்காதது. அன்னைக்கு நைட்டு தூங்கப் போகும் போது சரிப்பா நான் போறேன்னு எங்க அப்பா என்கிட்ட சொன்னாரு. நான் படுத்துகிட்டு சரிபா குட் நைட் என்று சொல்லி தான் அனுப்பி வச்ச. கடந்த ஆறு வருஷமா எங்க அப்பா கூட நிறைய டைம் கிடைச்சது. அவர் கூட ரொம்ப க்ளோஸ் ஆகி வீட்ல அவ்ளோ ஜாலியா இருந்தோம். நான் இன்னமும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கெங்கிறது எங்க அப்பாவுக்கு மிகப்பெரிய வருத்தமா தான் இருந்துச்சு. ஆனா எனக்கு எதிர்காலத்தில் கல்யாணம் நடந்தா கூட எங்க அப்பாவோட ஆசீர்வாதம் எப்போவுமே இருக்கு என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என மகாதேவன் எமோஷனலாக பேசியுள்ளார்.