அனேகன் முதல் கங்குவா வரை…. மறுபிறவியை சார்ந்து எடுக்கப்பட்ட படங்கள்… இதோ மொத்த லிஸ்ட்..!

By Soundarya on கார்த்திகை 15, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பீரியட்-பிரசன்ட் அதாவது மறுபிறவி குறித்த படங்கள் என்னென்ன உள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சூர்யாவின் 'கங்குவா' படத்துக்கு அதிக திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் -  காரணம் என்ன? | surya starrer kanguva movie not going to release much  theatre - hindutamil.in

   

கான்குவா படத்தில் சூர்யா கங்குவாவாகவும், ஃபிரான்சிஸாகவும் படத்தில் களமிறங்குகிறார். அதாவது `பீரியட்’ காட்சிகளில் கங்குவாவாகவும் `ப்ரசன்ட்’ காட்சிகளில் ஃபிரான்சிஸாகவும் வருகிறார் சூர்யா. இந்த படத்திலும் மறுபிறவி உள்ளது.

   

 

அருந்ததி படத்தில் பீரியட் பாகத்தில் அருந்ததி ஒரு விஷயத்தை விட்டு போயிருப்பார். அதை ஜக்கம்மா மறுபிறவியில் செய்து முடிப்பார். பிரபல நடிகை அனுஷ்காவுக்கு திருப்புமுனையாய் அமைந்த படம் அருந்ததி. அவரது தி றமையான நடிப்பாலும், மி ரட்டலான தோற்றத்தாலும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார்.   மறுபிறவி எடுத்து வில்லனை அனுஷ்கா அழிப்பதுபோல் இக்கதைக் களம் அமைந்து இருக்கும்.

மாவீரன் : 400 ஆண்டுகளுக்கு முன்பாக சரியா பிரிக்கப்பட்டு உயிரிழந்த காதல் ஜோடி மறு ஜென்மத்தில் ஒன்று சேர முடியுமா என்ற கற்பனையில் உருவான பிரம்மாண்ட படம் தான் மாவீரன். ராம்சரண் இந்த படத்தில் உடல் வலிமை, நடிப்பு திறமை இரண்டிலும் சிறப்பாக நடித்திருப்பார். காஜல் அகர்வால் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ராஜமவுலி இந்த படத்தை வரலாற்றுக் காலமும் தற்காலமும் கலந்த கதையாக விறுவிறுப்பாக எடுத்திருந்தார் .முன் ஜென்மத்தின் பகையை தீர்த்துக் கொள்வதுதான் இந்தப் பிரமாண்ட படத்தின் கதை.

ஏழாம் அறிவு : இந்த படத்தில் தற்காப்பு கலையில் வல்லவராக இருக்கும் போதித்தர்மன் நோய் பரவலை தடுப்பதற்கு சீனாவுக்கு சென்றபோது இறந்து விடுகிறார். அதன் பிறகு பயோ- வாரை இந்தியாவின் மீது தொடுக்கிறார் டாங் லீ. இவர் அரவிந்தனின் மரபனு போதிதர்மனுடைய மரபணுவோடு ஒன்று இருப்பதுதான் என்பதை கண்டுபிடித்து அரவிந்தோடு மோதலை தொடங்குகிறார். இந்த திட்டங்களை எல்லாம் அரவிந்து தடுப்பது தான் படத்தின் கதை.

அனேகன் : இந்த படத்தில் தனுஷ் தன்னுடைய காதலியோடு  நான்கு ஜென்மங்களாக சேர துடித்து போராடி எப்படியோ நான்காவது ஜென்மத்தில் தன்னுடைய காதலியோடு சேர்வது தான் படத்தின் கதை. மறு ஜென்மம் என்ற கான்செப்ட் கொண்ட திரைப்படங்களை எல்லாம் ஒரே ஒரு மறுபிறவி மட்டும்தான் இருக்கும். ஆனால் இதில் மொத்தம் நான்கு ஜென்மங்களை ஒரே வகையான கதாபாத்திரத்தை வைத்து எடுத்திருப்பார் இயக்குனர் கே வி ஆனந்த்.