தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்தவர் தான் எம்ஜிஆர். ஒரு நாடக நடிகராக இருந்த சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து பிறகு பெரிய நாயகனாக உயர்ந்து அரசியலிலும் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை அமைத்த எம்ஜிஆருக்கு இன்றும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. எம்ஜிஆரின் ஒவ்வொரு படங்களிலும் மக்களை கவரும் வகையில் ஒவ்வொரு கருத்து இடம் பெற்றிருக்கும்.

1936 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான எம்ஜிஆர் தொடர்ந்து பத்து வருட இடைவேளைக்குப் பிறகு நாயகனாக உருவெடுத்தார். பின்னர் 1956 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மதுரை வீரன். எம்ஜிஆர் எப்போதுமே தலைக்கனம் இல்லாதவர்.

எம்ஜிஆருக்கு எப்போதுமே கலைவாணர் என்றால் ரொம்பவே பிடிக்குமாம். கலைவாணரை தான் அவரின் வழிகாட்டியாகவும் வைத்திருந்தாராம். எம்ஜிஆருக்கு எப்போதுமே இவர் மீது தனி பாசம்.இந்நிலையில் 1957 ஆகஸ்ட் மாதம் கலைவாணர் இறந்துபோக எம்ஜிஆரின் வேனில் தான் இறுதி ஊர்வம் நடந்ததாம்.

இதனால் கலைவாணரின் குடும்பம் வறுமையில் வாட, எம்ஜிஆர் தான் அவருடைய பிள்ளைகளை படிக்க வைத்தாராம். சாப்பாடு செலவு கூட அவரே ஏற்றுக்கொண்டாராம். கலைவாணரின் வீடும் ஏலத்துக்கு போன நிலையில் அதையும் பணம் கொடுத்து வீட்டை மீட்டு கலைவாணர் குடும்பத்திற்கு கொடுத்தாராம்.
