cleopatra

சக்திவாய்ந்த ராணியாக பேரழகியாக திகழ்ந்த கிளியோபட்ரா… அவர் அழகின் ரகசியம் என்ன தெரியுமா…?

By admin on கார்த்திகை 13, 2024

Spread the love

வரலாற்றில் பல முக்கியமான நபர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் எகிப்து ராணி கிளியோபட்ரா உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த புத்திசாலித்தனமான சாதூரியமான ராணியாக கிளியோபட்ரா கருதப்படுகிறார் மற்றும் இவரை பேரழகி என்றும் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட பேரழகி கிளியோபட்ரா அவர்களின் அழகின் ரகசியம் என்ன? அழகை பாதுகாக்க அவர் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை பற்றி இனி காண்போம்.

   

கிளியோபட்ரா தனது அழகை பாதுகாக்க இயற்கையான முறையை பயன்படுத்தி இருக்கிறார். இயற்கையான பொருட்களை வைத்து தான் தனது அழகை பராமரித்திருக்கிறார். தனது உடல் முழுவதும் அழகாக இளமையாக இருக்க கிளியோபட்ரா பால் மற்றும் தேன் ஆகிய இரண்டையும் பெரிய குளியல் பக்கெட்டில் நிறைத்து பால் குளியல் தான் எடுப்பாராம். அடுத்ததாக ரோஸ் வாட்டரிலும் குளிப்பாராம்.

   

எண்ணெய் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகரை கொண்டு முகத்தை கழுவுவாரம் கிளியோபட்ரா. இது மட்டுமல்லாமல் தோல் பராமரிப்புக்காக வாத்து கொழுப்பு டர்பன்டைன் பயன்படுத்தியிருக்கிறார் மற்றும் உடலில் உள்ள அழுக்கை எடுப்பதற்கு கடல் உப்பு ஸ்கரப் பயன்படுத்தி இருக்கிறார். கல் உப்பு இயற்கையான ஒரு ஸ்கிரப் ஆகும்.

 

கிளியோபட்ரா விரல்களுக்கு நெயில் பாலிசாக பயன்படுத்தியது மருதாணி ஆகும். மருதாணியை அரைத்து விரல்களில் பூசும்போது அது நல்ல ஒரு சிவப்பு நிறத்தை அவருக்கு கொடுத்தது. பிறகு மருதாணி பெரி எண்ணெய் ஒரு சில தாவரங்கள் ஆகியவற்றை அரைத்து அதை தலையில் பூசி தலைமுடிக்கு சாயமாக பயன்படுத்தியிருக்கிறார் கிளியோபட்ரா. மேலும் தலைக்கு ஆலிவ் எண்ணையையே பயன்படுத்துவாராம்.

கிளியோபட்ரா ரோஜா பூக்களின் நறுமணத்தை விரும்புவராக இருந்திருக்கிறார். அதனால் ரோஜா பூக்களின் இதழ்களை தண்ணீரில் போட்டு வேகவைத்துஅந்த திரவத்தை எடுத்து வாசனை திரவியமாகவும் முகத்திற்கு பயன்படுத்தியிருக்கிறார். மேலும் முகங்கள் கைகள் கால்களில் வளரும் தேவையில்லாத முடியை எடுப்பதற்காக ஒரு குறிப்பிட்ட பறவையின் எலும்புகளை எடுத்து அதனுடன் வெள்ளரிக்காய் பசை எண்ணெய் சீமைக்காய் சாறு கலந்து வேகவைத்து எடுத்து தயாரிக்கப்பட்ட கிரீமை பயன்படுத்ததி தேவையில்லாத முடியை அகற்றி இருக்கிறார்.

உதட்டுச் சாயத்திற்கு பீட்ரூட்டால் உருக்கப்பட்ட க்ரீமை பயன்படுத்தி இருக்கிறார். உடல் துர்நாற்றத்தை தடுக்க சில வாசனை நிறைந்த எண்ணைகளை பயன்படுத்தி இருக்கிறார். சார்கோல் சன் ஃபைட் எனும் கருப்பு ரசாயனத்தை தான் கண்மையாக பயன்படுத்தி இருக்கிறார் கிளியோபட்ரா. இதில் பல விஷயங்களை நாம் கேள்விப்பட்டிருக்கலாம். சிலது நமக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் கிளியோபட்ரா தன் அழகை பராமரிப்பதில் மிகவும் மெனக்கட்டு செயல்படுவார் என்பது இதிலிருந்து நமக்கு தெரிகிறது.