தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் பாபி சிம்ஹா. சித்தார்த் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சூது கவ்வும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு நடித்த இவருக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்தன. தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக சித்தார்த் மற்றும் லட்சுமிமேனன் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்து இருந்த இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

தமிழ் சினிமாவில் நுழைந்த சிறிது காலத்திலேயே தேசிய விருது பெற்ற நடிகர் என்ற பெருமைக்குரியவர் தான் பாபி சிம்ஹா. அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்திலும் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரள வைத்தார். தமிழ் சினிமாவில் தற்போது தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பாபி சிம்ஹா பிரபல நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ரேஷ்மி மேனன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி கிருமி மற்றும் உறுமீன் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் பாபி சிம்ஹா தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதனைப் பார்த்து ரசிகர்கள் பாபி சிம்ஹாவின் மகள் இவ்வளவு வளர்ந்துட்டாங்களா என்று கேட்டு வருகிறார்கள்.
