உலக நாயகன் கமலஹாசன் ஒரு கலைஞனாக தொழில் நுணுக்கங்கள் ஒவ்வொரு துறையிலும் கற்று அதில் மேதையாக இருப்பது இவர் சினிமாவுக்கு கிடைத்த வரம் என்றே சொல்லலாம். சகலகலா வல்லவனான இவர் இதுவரை தன்னுடைய 60 வருட கால சினிமாவில் மட்டும் 230க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கதை, திரைக்கதை தயாரிப்பிலும் சாதனைகளை செய்து வருகிறார். ஒவ்வொரு நடிகருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் என்று தனித்தனி சென்டிமென்ட் இருக்கும். அதேபோல நடிகர் கமலஹாசனுக்கும் ஒரு சென்டிமென்ட் உள்ளதாம். அதாவது அவருடைய படங்கள் ஜூன் மாதத்தில் ரிலீஸ் செய்வது செண்டிமெண்டாக வைத்துள்ளார். அதன்படி அவர் நடிப்பில் உருவாகி ஜூன் மாதத்தில் வெளியான படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் அடித்துள்ளதாம். அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பஞ்சதந்திரம் திரைப்படத்தில் கமலுடன் இணைந்து ஊர்வசி, சிம்ரன், ஜெயராம், ரமேஷ் ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்த படம் 2002 ஆம் வருடம் ஜூன் மாதம் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். இந்த படம் 500 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. இந்த படமும் கடந்த 2022 ஆம் வருடம் ஜூன் மூன்றாம் தேதி ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்றது.

தக்லைப் திரைப்படம் இந்தியா முழுவதும் மீண்டும் அனல் பறக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கு கமல் மணிரத்தினம் கூட்டணி ஒரு உதாரணமாக இருக்கிறது. இந்த படமும் 2020ஆம் வருடம் ஜூன் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கமல் எதற்கும் செண்டிமெண்ட் பார்ப்பதில்லை மேலும் அவர் மற்ற நடிகர்களோடு போட்டி போடுவதையும் விட விரும்புவதில்லை. இதனால் மத்தியில் உள்ள மாதமான ஜூன் மாதத்தை தேர்வு செய்தது அவரின் தனிப்பட்ட விருப்பமாகவே அவருடைய படங்களை ரிலீஸ் செய்கிறார் என்று கூறப்படுகிறது. இதில் சென்டிமென்ட்க்கு இடமில்லை என்றும் கூறுகிறார்கள்.
