ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருந்தவர் கார்த்திக். அவர் அந்த சீரியலில் இருந்து பாதியில் விலகியதும் அந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் அப்படியே சரிந்தது. செம்பருத்தி சீரியல் ஐ தொடர்ந்து தற்போது கார்த்திகை தீபம் என்ற சீரியலில் கார்த்திக் கதாநாயகனாக நடித்து வருகின்றார். இந்த சீரியல் ஒளிபரப்பாவதற்கு முன்பே இந்த சீரியலுக்கு தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் உருவானது. கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பான நாளிலிருந்து இதுதான் டிஆர்பி ரேட்டிங்கில் முதலில் இருந்து வருகிறது. இதில் கார்த்திக் மற்றும் அர்த்திகாவின் காதல் காட்சி மற்றும் இருவரின் ஜோடி பொருத்தம் என அனைத்துமே நன்றாக இருக்கும்.

மக்களின் மனதை கவர்ந்த இந்த சீரியலில் தீபா மற்றும் கீதா என இரண்டு ரோல்களில் அர்த்திகா நடித்து வந்தார். தற்போது கார்த்திகை தீபம் சீரியல் இந்த வாரத்தோடு முடிக்கப்பட்டு அடுத்த வாரத்தில் இருந்து கார்த்திகை தீபம் சீசன் 2 தொடங்க உள்ளது. அதன் புரோமோ சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் கார்த்திக் கிராமத்து கெட்டபில் வேஷ்டி சட்டையில் உள்ளார். அவருக்கு ஜோடியாக புது நடிகை ஒருவர் கமிட்டாகி உள்ளார். இதில் நடிகை அர்த்திகா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள நிலையில் கார்த்திக் மற்றும் அர்த்திகா ஜோடி தான் பொருத்தமாக இருக்கிறது என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
)
இப்படியான நிலையில் நடிகை அர்த்திகா தனது youtube சேனலில் சீரியல் இருந்து நீக்கப்பட்டது குறித்து பேசி உள்ளார். அதில், கார்த்திகை தீபம் தான் என் முதல் சீரியல். இதில் மக்கள் அனைவரும் என்னை கொண்டாடினார்கள் என்று நினைக்கும் போது எனக்கு சந்தோசமா இருக்கு. இந்த சீரியலில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்தேன் என்று சொல்வதை விட வாழ்ந்து இருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இந்த சீரியல் முடிய போகிறது. அடுத்து கார்த்திகை தீபம் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகும் நிலையில் இந்த சீரியலில் இருந்து என்னை நீக்கி விட்டார்கள்.

அதற்கு முக்கிய காரணம் எனக்கு அண்மையில் தான் கல்யாணம் ஆச்சு, இதனால் என்னால் நெருக்கமான காட்சிகளில் நடிக்க முடியவில்லை, இதையெல்லாம் பார்த்துவிட்டு என்னை சீரியலில் இருந்து திட்டம் போட்டு தூக்கி விட்டார்கள். இதில் நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. தற்போது வரை எனக்கு ஆதரவு அளித்த என் தமிழ் ரசிகர்களுக்கு நன்றி, எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என்று வீடியோவில் பேசியுள்ளார்.
