vaali

MGR இடம் சொல்லாமல் கவிஞர் வாலி செய்த காரியம்…. கோபப்பட்ட புரட்சி தலைவர் கொடுத்த பதிலடி…

By admin on கார்த்திகை 8, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ்பெற்ற நடிகராக இருந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. இன்றைய இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் இன்ஸ்பிரேஷன் ஆக கண்டிப்பாக MGR இருப்பார்.

   

அரசியல் ஆனாலும் சினிமா ஆனாலும் இரண்டிலுமே சிறந்து விளங்கியவர் MGR. தனக்கென தனி வழி ஏற்படுத்தி சிம்மாசனம் அமைத்து அமர்ந்திருந்தவர் MGR. குடும்ப வறுமைக்காக நாடகத்தில் நடிக்க ஆரம்பித்து பின்னர் நடிகராக உயர்ந்தவர் MGR.

   

MGR படங்கள் என்றாலே சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் அக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர்.MGR படங்கள் வந்தாலே ஹிட் தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார் MGR.

 

தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய MGR திராவிடக் கட்சிகளில் இணைந்து பணியாற்றினார். பின்னர் தனியாக கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக சிறப்பாக ஆட்சி நடத்தினார்.

எம்ஜிஆர் நல்ல மனிதர் மட்டுமல்ல உதவும் மனப்பான்மை கொண்டவர் வாரி வழங்கும் வள்ளல். சில நேரம் அவருக்கு கோபம் வரும் ஆனால் அது சரியாகி அவரே தேடி வந்து பேசுவார். அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அது என்னவென்றால் எம்ஜிஆரின் படங்களுக்கு பெரும்பாலான பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. எம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும் நடுவே நல்ல ஒரு நட்பு இருந்தது.

வாலியை தமிழில் நடிக்கும் திலகம் என்ற பெண் காதலித்தார். அவர்கள் வீட்டில் எதிர்ப்பு வரவே வீட்டை விட்டு வெளியேறிய அந்தப் பெண் வாலியை தேடி வந்தார். இருவருக்கும் அவசரமாக திருமணம் நடைபெற்றது. இதை எம்ஜிஆர் என்னிடம் சொல்லாமலேயே வாலி திருமணம் செய்துவிட்டானா என்று கோபத்தில் அவர் என் பத்தில் பாடல் எழுதக்கூடாது என்று கூறினார். அதன்படி நான்கு படங்கள் வாலி எழுதக் கூடாது என்று எம்ஜிஆர் சொன்னதால் அப்படியே நின்று இருந்தது.

சிறிது காலம் கழித்து வாலியின் வீட்டிற்கே நேராக எம்ஜிஆர் சென்றார். அவரின் மீது கொண்டிருந்த அன்பினாலும் நட்பினாலும் நேரடியாக சென்று பேசி சரி பண்ணி மீண்டும் படங்களில் பாடல் எழுதும்படி வாலியிடம் கூறியிருக்கிறார் MGR. இப்படி ஒரு குழந்தை உள்ளம் கொண்டவர்தான் எம்ஜிஆர் என்பது இதிலிருந்து நமக்கு தெரிகிறது.