ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவில் பணிபுரிந்த பிரபலமான நடிகை ஆவார். 2015 ஆம் ஆண்டு டம்மி பட்டாசு திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். பின்னர் 2016 ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ரம்யா பாண்டியன்.

அதற்கு அடுத்ததாக 2018 ஆம் ஆண்டு சமுத்திரக்கனி உடன் ஆண் தேவதை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் ரம்யா பாண்டியன். இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. தொடர்ந்து ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் போன்ற ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்றார் ரம்யா பாண்டியன்.

பின்னர் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோ ஆன பிக் பாஸ் சீசன் 4 இல் போட்டியாளராக பங்கேற்றார் ரம்யா பாண்டியன். இவர் தமிழ் மொழி படங்களில் நடித்த பிரபலமான அருண்பாண்டியன் அவர்களின் மருமகள் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. பல படங்களில் கமிட்டாகி பிஸியாக இருக்கிறார் ரம்யா பாண்டியன்.

இந்நிலையில் கடந்த மாதமே ரம்யா பாண்டியன் யோகா பயிற்சியாளர் ஆன லோவல் தவானை காதலிப்பதாக செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில் இன்று ரம்யா பாண்டியன் தனது காதலர் நோவல் தவானை கங்கை கரை ஓரமாக அமைந்துள்ள ரிஷிகேஷில் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
