knee pain

முதியோர்களை பாதிக்கும் மூட்டு வலி… அதிலிருந்து நிவாரணம் பெறுவது எப்படி…?

By admin on கார்த்திகை 8, 2024

Spread the love

வயதாகி விட்டால் உடல் பலவீனம் காரணமாக பல உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். இன்றைய காலகட்டத்தில் இந்த வயதில் தான் இல்லை சிறுவயதில் கூட பல நோய்கள் ஏற்படத்தான் செய்கிறது. ஆனாலும் முதுமை காலத்தில் இது அதிகப்படியாக ஆகும். அப்படி முதியோர்கள் பலரும் இன்றைய காலகட்டத்தில் சமாளிக்கும் ஒரு பிரச்சனை மூட்டு வலி. இந்த மூட்டு வலி தீரவே தீராதா அதற்கு என்ன செய்யலாம் நிவாரணம் எப்படி கிடைக்கும் என்பதை பற்றி இனி காண்போம்.

   

நம் மூட்டு கால் மூட்டில் இருக்கும் எலும்பு தேய்மானம் அடையும்போது அல்லது உடலில் பலம் இல்லாமல் இருப்பது வயது மூப்பு போன்ற பல்வேறு காரணங்களால் மூட்டு வலி ஏற்படுகிறது. முன்பெல்லாம் 50 வயதுக்கு மேல் தாண்டி விட்டால் தான் இந்த மூட்டு வலி எல்லாம் வரும் என்கிறார்கள். ஆனால் இப்போது இளம் வயதில் இருப்பவர்களுக்கும் மூட்டு வலி வருகிறது. நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை செய்பவர்களுக்கும் மூட்டுவலி பாதிப்பு அதிகமாக ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஒரு சில வழிமுறைகளை கையாளுவதன் மூலம் இந்த மூட்டு வலியில் இருந்து நம்மால் தப்பிக்க இயலும்.

   

உடல் பருமன் இருப்பவர்களுக்கு மூட்டு வலி எளிதாக ஏற்படக்கூடும். அதனால் உங்கள் உயரத்திற்கு ஏற்ப சரியா எடையை பராமரித்தால் மூட்டு வலி வந்தாலும் எளிதாக குணப்படுத்த முடியும். வயதானவர்களுக்கு மூட்டு வலி ஏற்படும் போது சில எளிதான உடற்பயிற்சிகளை பிசியோதெரபிஸ்ட் ஆலோசனையுடன் செய்யும்போது முழங்கால் வலி சரியாகும்.

 

மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் முதலில் உங்கள் மூட்டை சுற்றி இருக்கும் தசைகளை வலுப்படுத்த வேண்டும். அதற்கு மடக்குதல் நீட்டுதல் போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும். இந்த பயிற்சியை வாரம் இருமுறை செய்யும்போது முழங்காலில் வலிமை அதிகரித்து வலி குறையும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள் படிக்கட்டுகளில் அடிக்கடி ஏறுவது சரிவுகளில் நடப்பது போன்றவற்றை கொஞ்சம் தவிர்க்க வேண்டும்.

இது மட்டுமில்லாமல் மூட்டு வலியை சரி செய்யும் சில யோகாசன பயிற்சியும் இருக்கிறது. அதில் விருப்பம் உள்ளவர்கள் யோகாசன பயிற்சியும் செய்யலாம். எலும்புகளை பலப்படுத்தும் கஷாயம் வைத்து குடிக்கலாம். சிலர் வெளிப்புறமாக 10 போடுவார்கள், கல் உப்பு பத்து போடுவது பச்சை இலை பத்து போடுவது போன்றவைகள் ஒரு சிலர் செய்வார்கள். இந்த மாதிரி வழிமுறைகளை கடைப்பிடிக்கும் போது மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.