ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தால் கங்குவா ரிலீஸ்க்கு வந்த சிக்கல்…. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!!

By Soundarya on கார்த்திகை 7, 2024

Spread the love

2024ம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த  5 திரைப்படங்களில் ஒன்று சூர்யாவின் கங்குவா திரைப்படம். பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமான விஸ்வாசத்தை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன் தயாரிக்கிறது.

   

இந்த படத்தில் நடிகர் சூர்யா மொத்தம் ஏழு வேடங்களில்  நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கங்குவா’. 38 மொழிகளில், 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்

   

 

இந்நிலையில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், பல திரைப்பட தயாரிப்புக்கு வாங்கிய ரூ.99.22 கோடியில் மீதமுள்ள ரூ.55 கோடியை திரும்ப வழங்காததால், கங்குவா படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகை நாளை வழங்கப்படும் என ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.  நாளைக்குள் மீதமுள்ள தொகை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதை அடுத்து, வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவு செய்யப்பட்டுள்ளது.