bada bagh

18 ஆம் நூற்றாண்டில் மன்னர்களால் கட்டப்பட்டது… ஜெய்சல்மார் படா பாக் வரலாறு…

By admin on கார்த்திகை 6, 2024

Spread the love

இந்தியாவில் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இருக்கிறது. அதில் ஒன்றுதான் ஜெய்சல்மார் படா பாக் என்பதாகும். ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த ஜெய்சல்மார் படா பாக் என்றால் ஒரு பெரிய தோட்டம் என்பது பொருள். ஜெய்சல்மாரின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இந்த படா பாக் 18 19 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது. இதன் வரலாறு என்ன என்பதைப் பற்றி இனி காண்போம்.

   

ஜெய்சல்மார் ரயில் நிலையத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது படா பாக். இது ஒரு வரலாற்று பாரம்பரியமிக்க ஒரு பூங்காவாகும். ஜெய்சல்மாரின் அரச குடும்பத்து கல்லறைகள் அல்லது சத்திரியர்களின் தோட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த படா பாக் தோட்டம் ஒரு மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் மகாராஜா ஜெயந்த் சிங் இந்த இடத்தில் ஒரு நீர் தொட்டியை கட்ட வேண்டும் என்று விரும்பினார். அது கட்டிய பிறகு இந்த பாலைவனம் பசுமையாக காட்சியளித்தது. அவர் மரணத்திற்கு பிறகு அவரது மகன் லுங்கரன் இந்த இடத்தை முழுமையாக உருவாக்கினார்.

   

இந்த படா பாக் கட்டிடங்கள் முகலாய மற்றும் ராஜபுத்ர கட்டிடக்கலையின் கலவையில் உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு கல்லறையிலும் ராஜா மற்றும் ராணியின் பெயர்கள் பொறிக்கப்பட்ட தாட்டுகள் இருக்கிறது. ஜெயிந்த் சிங் மகன் லுங்கரன் இந்த கட்டிடங்களை உருவாக்கிய பிறகு ஜெய்சல்மாரின் கடைசி மன்னனான ஜவாஹீர் சிங் இருபதாம் நூற்றாண்டில் இதை பராமரித்தார் ஆனால் முழுமையாக கட்டி முடிக்கவில்லை.

 

படா பாக் ஒரு சிறிய மலையில் நினைவுச்சின்னமான சத்ரியின் சமாதிகள் அனைத்தும் மணற்கற்களால் செதுக்கப்பட்டிருக்கிறது. இந்த இடம் சுற்றுலா பயணிகளுக்கு பார்வையிடுவதற்காக அனுமதிக்கப்படுகிறது. மன்னர்கள் காலத்தில் எப்படி எல்லாம் அவர்கள் வாழ்க்கை முறை இருந்திருக்கும் என்பது சான்றாக இந்த ஜெய்சல்மார் படா பாக் நினைவு சின்னங்கள் இருக்கின்றது.