தமிழ் சினிமாவில் 90ஸ் தொடங்கி இன்று வரையிலும் பல திரைப்படங்களில் நடித்து கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் அர்ஜூன். இவர் கதாநாயகனாகவும், வில்லனாகவும் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
![]()
மேலும் இவர் பல திரைப்படங்களில் இயக்கியும் நடித்திருக்கிறார். இவர் பொதுவாகவே ஆக்சன் திரைப்படங்களில் நடித்த ரசிகர்களை கவர்ந்தவர். அதன் காரணமாகவே நடிகர் அர்ஜுன் ஆக்சன் கிங் என்று ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகிறார்கள். தற்போது 60 வயதாகும் அர்ஜூன் இளம் ஹீரோகளுக்கு டப் கொடுக்கும் விதமாக தனது உடலை மெருகேற்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றார்.

#image_title
இவருக்கு சினிமாவில் ஆரம்ப காலத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எனவே தன்னுடைய சொந்த பணத்தை வைத்து தானே இயக்கி நடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். அதன்படி சேவகன் என்ற திரைப்படத்தை இயக்கி தயாரித்து அர்ஜுன் நடிக்க தொடங்கினார். இவருடைய மகளுக்கு சமீபத்தில் தன திருமணம் நடந்து முடிந்தது.

இந்நிலையில் அமரன் படத்தை பார்த்த அர்ஜூன் அது குறித்து பேசுகையில், நானும் ஒரு மிலிட்டரி ஆபீஸர் ஆகணும்னு தான் ஆசைப்பட்டேன். அந்த அப்ளிகேஷன் பார்மை எடுத்துக்கொண்டு என்னுடைய அம்மாவிடம் கொடுத்து அதில் கையெழுத்து போட சொன்னபோது அதில் பெற்றோர்கள் கையெழுத்து பண்ணும் ஒரு இடத்தில் “உயிருக்கு என்ன ஆனாலும் நாங்களே பொறுப்பு” என்று இருந்தது. அதை பார்த்துவிட்டு என்னுடைய அம்மா அழுதுவிட்டு கையெழுத்து போட மறுத்தார் இல்லை என்றால் நானும் ஆர்மியில் சேர்ந்து இருப்பேன்.
