சத்தமில்லாமல் சம்பவம் செய்த அமரன்.. இரண்டே நாளில் இத்தனை கோடி வசூலா..?

By Nanthini on கார்த்திகை 2, 2024

Spread the love

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு கௌதம் கார்த்திக் நடித்த ரங்கூன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இது தவிர பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைரக்டராகவும் ராஜ்குமார் பெரியசாமி பணியாற்றியுள்ளார். அப்போது கமல்ஹாசன் உடன் கிடைத்த நட்புக்கு பரிசாக கிடைத்தது தான் அமரன் திரைப்பட வாய்ப்பு. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான். இவர் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ள நிலையில் ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியானது.

தமிழ்நாட்டில் 2 நாட்களில் அமரன் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Amaran Tamilnadu 2 Days Box Office Collection

   

இதில் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். தீவிரவாதிகள் உடனான மோதலில் வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த இராணுவ மேஜரான முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்ததால் அமரன் திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்காக மிகவும் ரிஸ்க் எடுத்து சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பட வருடங்களுக்கு பின்னர் தேச உணர்வை பறைசாற்றும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படம், முதல் நாளிலேயே தமிழகத்தில் சுமார் ரூ.20 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும், உலக அளவில் 42 .3 கோடி வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

   

Amaran Box Office: இந்தியன் 2 முதல் நாள் வசூலை முந்திய அமரன்.. இந்த ஆண்டின்  3வது மிகப்பெரிய ஓபனிங்! | Sivakarthikeyan Amaran Day 1 World Wide Box  Office Collection reports are here in ...

 

இதைத்தொடர்ந்து இரண்டாவது நாளில் அமரன் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.20 முதல் ரூ.23 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படும் நிலையில், கோட் பட வசூல் சாதனையை அடித்து நொறுக்கி விட்டதாக கூறப்படுகிறது. கோட் திரைப்படம் இரண்டாவது நாளில் தமிழகத்தில் ரூ.22 கோடி மட்டுமே வசூலித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றும்  நாளையும் விடுமுறை நாட்கள் என்பதாலும் அமரன் திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடி கொண்டிருப்பதாலும், கண்டிப்பாக இப்படம் 500 கோடி வசூல் சாதனையை எட்ட வாய்ப்புள்ளாக கூறப்படுகிறது.