கொளுத்தும் கோடை வெயிலில் ஜானகியின் காலணியை கழட்ட சொன்ன எம்ஜிஆர்.. காரணத்தை கேட்டா அசந்துருவீங்க..!

By Nanthini on ஐப்பசி 30, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் தான் நடிகர் எம் ஜி ஆர். நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல தடைகளை கடந்து நாயகனாக மாறியவர். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தார். யார் தயாரிப்பாளராக இருந்தாலும் இந்த படம் தொடர்பான முடிவை தானே எடுக்கும் வல்லமையுடன் வளம் வந்தவர் எம்ஜிஆர். அதுமட்டுமல்லாமல் பல நடிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்துள்ளார். படபிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சமமான உணவு வழங்க வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வந்தவர்  எம்ஜிஆர்  தான்.

   

நடிகர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து அனைவரையும் திகைக்க வைத்தவர் தான் எம்ஜிஆர். அப்படி எம்ஜிஆர் செய்த ஒரு உதவி பலரையும் வியக்க வைத்துள்ளது. அதாவது ஒரு நாள் எம்ஜிஆர் தனது மனைவி ஜானகி மற்றும் உறவினர் பெண்ணுடன் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் போது, கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. அப்போது ஓசூர் அருகே ஒரு பாட்டியும் சிறுமியும் தலையில் புல்லுக்கட்டை சுமந்து கொண்டு காலில் செருப்பு கூட இல்லாமல் நடந்து சென்று கொண்டிருந்தனர். அதனைப் பார்த்து காரை நிறுத்த சொல்லி இறங்கிய எம்ஜிஆர் அந்த பாட்டியிடம் சென்று எங்கு இருந்து வரீங்க என்று கேட்டார்.

   

எம்.ஜி.ஆரின் மனைவியும் முன்னாள் முதலமைச்சருமான ஜானகியின் 24வது நினைவு நாள்! அரிய புகைப்பட தொகுப்பு! | misses Janaki ramachandran rare photo gallery

 

அதற்கு அவங்க புல்லு அறுத்துகிட்டு வரும் ஒரு கட்டுக்கு ஒரு ரூபாய் கிடைக்கும் என்று கூறியுள்ளார். உடனே எம்ஜிஆர் காரில் இருந்த ஜானகியையும் உறவினர் பெண்ணையும் காலில் இருக்கும் செருப்பை கழட்டுமாறு கூறியுள்ளார். அதனை வாங்கி அந்த பாட்டியிடமும் சிறுமியிடமும் கொடுத்துள்ளார். அதே சமயம் அவர்களுக்கு பணத்தையும் கொடுத்துவிட்டு பார்த்துப் போங்க என்று கூறிவிட்டு எம்ஜிஆர் அங்கிருந்து கிளம்பினார். அந்த சிறுமி சொல்லி தான் உதவி செய்தது எம்ஜிஆர் என்று அந்த பாட்டுக்கு தெரியும். உடனே அந்த பாட்டு ஐயா நீங்க நல்லா இருக்கணும் என்று வாழ்த்தி விட்டுச் சென்றார். உதவி செய்யும் ஒரு குணம் ரத்தத்தில் இருக்கும் ஒருவருக்கு மட்டுமே இப்படி செய்யத் தோன்றும். அதனால்தான் எம்ஜிஆர் மக்களை தன் ரத்தத்தின் ரத்தமே என்று கூறுவார்.