தமிழ், மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார் சாய் பல்லவி. என்றும் பலர் அவரை மலர் டீச்சர் என்று தான் கூப்பிடுகிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

#image_title
இவர் தமிழில் தியா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தனுஷ் மற்றும் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடிக்க தொடங்கினார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான கார்கி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சாய்பல்லவி தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

#image_title
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்திற்கான ஆடியோ லாஞ்சு, புரொமோஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நான் கவர் பண்ணி சேலை கட்டிட்டு வர்றதுனால நல்ல பொண்ணுன்னு மாடர்ன் டிரஸ்ல வந்தா கெட்ட பொண்ணு நினைக்கறது எல்லாம் ரொம்ப தப்பு.

#image_title
நாளைக்கே எனக்கு ஒரு குழந்தை பிறந்து அது அவளுக்கும் வசதியா இருந்து எல்லோரையும் போல குட்டி டிரஸ் போடணும்னு ஆசைப்பட்டால் நான் போட சொல்லுவேன். அதை விட்டுட்டு அவங்க தப்பா பார்ப்பார்கள் என்று நான் சொல்ல மாட்டேன். மாடர்ன் உடைகள் அல்லது மேக்கப் அணியும் மற்றவர்களை கீழே இறக்கி பேசுவதற்கு மக்கள் என்னை உதாரணமாகப் பயன்படுத்தும்போது கஷ்டமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
