பிரேம்ஜி மாமியார் மசாலா ஆரம்பிக்க காரணம் இதுதான்.. மனம் திறந்த நடிகர் பிரேம்ஜி மனைவி இந்து..!

By Nanthini on ஐப்பசி 28, 2024

Spread the love

நடிகர் பிரேம்ஜி முரட்டு சிங்கிளாகவே காலத்தை கழித்து வந்த நிலையில் இதை பெருமையாக பல இடங்களிலும் பேசி வந்தார். ஆனால் அவரையும் காலம் திருமண பந்தத்தில் சேர்த்து விட்டது. சேலத்தை சேர்ந்த இந்து என்பவரை பிரேம்ஜி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய அண்ணன் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சென்னை 28 உள்ளிட்ட திரைப்படங்களில் காமெடி கலாட்டா செய்தவர் தான் பிரேம்ஜி. இவர் நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். நடிகர் பிரேம்ஜி பிரபல இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் வெங்கட் பிரபுவின் உடன் பிறந்த தம்பி ஆவார்.

   

தன்னுடைய அண்ணன் படங்களில் நடித்து தனது டைமிங் காமெடி மற்றும் பாடி லாங்குவேஜால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இவருடைய கேங்கிலேயே தொடர்ந்து முரட்டு சிங்கிளாக இருந்து வந்தார். இதைப் பெருமையாகவும் பல பேட்டிகளில் இவர் கூறியுள்ளார். இந்த நிலையில் பிரேம்ஜிக்கு சேலத்தை சேர்ந்த இந்து என்ற பெண்ணுடன் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. நட்பாக தொடங்கிய இவர்களுடைய சினேகம் காதலாக மாறி இறுதியாக திருமணத்தில் நிறைவடைந்துள்ளது. திருத்தணி முருகர் கோவிலில் தான் இவர்களுடைய திருமணம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடந்தது. தற்போது பிரேம்ஜி திருமண வாழ்க்கையை மிகச் சிறப்பாக வாழ்ந்து வருகிறார். இவருடைய மாமியார் சமீபத்தில் பிரேம்ஜி பெயரிலேயே ஒரு புதிய தொழிலை தொடங்கியிருந்தார்.

   

 

இந்த நிலையில் பிரேம்ஜி மாமியார் மசாலா தொடங்கப்பட்ட கதை குறித்து பேசி உள்ள பிரேம்ஜியின் மனைவி இந்து, ஸ்கூல் காலேஜ் எல்லாம் நான் ஹாஸ்டலில் தங்கி தான் படிச்சேன். வீட்ல பயங்கர செல்லம். அதனால அம்மா என்னை சமையல் செய்ய விட்டதில்லை. மேரேஜ் ஆனதும் அம்மாகிட்ட தான் கேட்டு கேட்டு சமைப்பேன். எனக்காக என் கணவரும் ஆசையா சமைச்சு தருவாரு. மேரேஜ் ஆகி வந்ததும் பாக்கெட் மசாலா தான் பயன்படுத்தினேன். அப்போ நெஞ்செரிச்சல் எல்லாம் வந்துடுச்சு.

பிரேம்ஜிஸ் மாமியார் மசாலா ஆரம்பிக்க காரணம் அவர்தான்!” - பிரேம்ஜி மனைவி  இந்து பேட்டி - Vikatan

 

அதுக்கப்புறம் தான் மசாலா பொருட்களை அம்மா அரச்சி கொடுத்தாங்க. அம்மா தயாரிக்கிற மசாலா பொருட்களோட சமையலை அவர் ரொம்ப விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டார். என்னோட அம்மா சமையலை சாப்பிடற மாதிரி இருக்குன்னு பாராட்டினாரு. எங்களோட சொந்தக்காரர்களுக்கும் மசாலா பொருட்களை அம்மா கொடுத்திருக்காங்க. எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னதுனால இதையே ஒரு பிசினஸா பண்ணலாமுன்னு கணவர் பிரேம்ஜி தான் ஐடியா கொடுத்தார். அப்படிதான் பிரேம்ஜி மாமியார் மசாலா என்று பெயர் வைத்து ஆரம்பித்து விட்டோம் என்று பிரேம்ஜி மனைவி இந்து பேசியுள்ளார்.