vijay

நமக்கு எதுக்கு அரசியல்…? வந்தோமா நடிச்சோமா காசு சம்பாதிச்சோமா அமைதியா இருந்திடலாம் அப்படி தான் நினைச்சேன்… ஆனால்…. த வெ க மாநாட்டில் விஜய் பகிர்வு…

By admin on ஐப்பசி 27, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து புகழ்பெற்ற நடிகராக இருந்து இன்று சினிமாவே வேண்டாம் என்று கூறி மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று விரும்பி விஜய் அரசியலில் களமிறங்க போவதாக அறிவித்திருந்தார். இது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியா செய்தியாக இருந்தது. அதன்படி சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் பெயரையும் கட்சியின் கொடியையும் கட்சியின் பாடலையும் வெளியிட்டார் நடிகர் விஜய்.

   

தற்போது அவர் உருவாக்கிய தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் மாபெரும் முதல் மாநில மாநாடு விக்ரவாண்டியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிகவும் பிரம்மாண்ட முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் அங்கு விஜயின் பேச்சை கேட்பதற்காக கூடியிருக்கிறார்கள்.

   

விக்கிரவாண்டியின் சாலை முழுவதும் கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் சுற்றளவில் அனைத்தும் வாகனங்களால் சூழப்பட்டு ஸ்தம்பித்து போய் இருக்கிறது. சமீபத்திய காலங்களில் வ்வளவு பெரும் கூட்டம் எங்கேயுமே கூடாத அளவுக்கு விஜயின் ஆதரவாளர்கள் தொண்டர்கள் கூடியிருக்கிறார்கள்.

 

கட்சி கொடியை ஏற்றிவிட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார் விஜய். அதற்கு பிறகு கட்சியின் கொள்கை தீர்மானம் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதற்குப் பிறகு விஜய் பேச ஆரம்பித்தார். பேச ஆரம்பித்த பிறகு விஜய் நான் எதற்கு அரசியலுக்கு வந்தேன் என்பதை பற்றி பகிர்ந்து இருக்கிறார்.

அவர் கூறியது என்னவென்றால் நமக்கு எதுக்கு அரசியல் நம்ம நடிக்க வந்தோமா நடிச்சோமா காசு சம்பாதிச்சோமா அமைதியா இருந்துடலாம் அப்படின்னு தான் நான் முதல்ல நினைச்சேன். அதுக்கப்புறம் என்னை ஆதரவளித்து இன்னைக்கு இந்த இடத்துல உட்கார வச்சிருக்க மக்களுக்கு நான் என்ன செய்தேன் யாராவது வர மாட்டாங்களா இந்த சமுதாயத்தில் நல்லது நடக்காதா என்று எத்தனை பேர் ஏங்கிட்டு இருக்காங்க. என்னை மேலே ஏற்றி வைத்த மக்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று தான் நான் இன்னைக்கு அரசியலுக்கு நான் வந்து இருக்கேன். மக்ககளுக்கு எல்லாமாவும் நான் இருப்பேன் அவங்க என்ன எல்லாம் நினைக்கிறாங்களோ அதெல்லாம் செய்வேன் என்று பேசி இருக்கிறார் விஜய்.