TVK மாநாட்டில் மகன் விஜய்க்கு பெற்றோர் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்… யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!

By Nanthini on ஐப்பசி 26, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் இறுதியாக GOAT திரைப்படத்தில் நடித்து முடித்திருந்த நிலையில் அடுத்ததாக தளபதி 69 திரைப்படத்தில் மட்டும் நடிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இந்நிலையில் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் விக்கிரவாண்டி நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளனர். இதனால் விக்கிரவாண்டியில் ஹோட்டல் அறைகள் முழுவதும் நிரம்பி வழிவதால் வீடுகளில் வாடகைக்கு எடுத்து தொண்டர்கள் தங்கி உள்ளனர்.

Album - 'விஜய் 69' பட பூஜையில் ஸ்டார் அணிவகுப்பு - புகைப்படத் தொகுப்பு |  vijay 69 movie shooting start with pooja ceremony

   

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே வி சாலைப் பகுதியில் நாளை நடைபெற உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சியின் பொதுச் செயலாளரான பிஸ்ஸி ஆனந்த் விஜயின் அறிவுறுத்தலின்படி மேற்கொண்டு வருகின்றார். சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. நாளை மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் 100 அடி கொடிக்கம்பத்தில் விஜய் கொடி ஏற்றுகிறார்.

   

TVK மாநாடு முன்னிட்டு மகனுக்காக சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட தளபதி பெற்றோர்...  | Tamil Cinema News

 

இதனைத் தொடர்ந்து விஜயின் மாநாட்டுக்கு நடிகர் நடிகைகள் உட்பட தொண்டர்கள் பலரும் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் விஜயின் மாநாட்டிற்கு நாளை அவரது பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் செல்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கள் மகன் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கொளத்தூர் சாய்பாபா கோவிலில் இருவரும் தவெக பேட்ஜ் உள்ள மாலையை சாய்பாபாவிற்கு அணிவித்து சிறப்பு பூஜை நடத்தினர்.

நெருங்கும் தவெக மாநாடு.. ஆட்சி அமைப்பது குறித்து தந்தை சொன்ன பதில்! -  தமிழ்நாடு

 

இந்த நிலையில் சாய்பாபாவிற்கு அணிவிக்கப்பட்ட அந்த மாலை தற்போது கோவிலில் இருந்து விஜயின் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை அந்த மாலையை மாநாட்டில் விஜய்க்கு அவரது பெற்றோர்கள் அணிவிக்க உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. TVK பேட்ஜ் உடன் இருக்கும் அந்த மாலை சாய்பாபாவுக்கு அணிவிக்கப்பட்ட சிறப்பு பூஜை நடத்தப்பட்டு நாளை விஜய்க்கு போடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத விதமாக இந்த சர்ப்ரைஸ் நாளை விஜய்க்கு அவரது பெற்றோர்கள் கொடுக்க உள்ளனர்.