தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இளம் வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான விஜய் தனது 18 வது வயதில் செந்தூரப்பாண்டி திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

1990களில் மெல்ல மெல்ல தனது நடிப்பு திறமையால் மக்களில் மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்த விஜய் 2000 களுக்கு பிறகு நல்ல சமூகத்திற்கு தேவையான கதையை தேர்ந்தெடுத்து நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக ஆனார்.
தற்போது எம்ஜிஆர்க்கு அடுத்தபடியாக விஜய் நடித்தால் படம் ஹிட்டுதான் என்ற பெயரை வைத்திருக்கிறார். சினிமாவில் புகழில் உச்சியில் இருந்த போதிலும் விஜய் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பி அரசியலில் இறங்க போவதாக அறிவித்தார்.
இதன்படி நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து கட்சி கொடியையும் அறிமுகம் செய்து இருக்கிறார். நாளை அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் மாபெரும் மாநாடு நடைபெற இருக்கிறது. அதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகை திரிஷா ஸ்பெயினில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் சூட்டில் இருக்கிறார். அவர் ஒரு இன்ஸ்டாவில் ஒரு பதிவை போட்டு இருக்கிறார். அதில் கையில் முறுக்கு ஒன்றை வைத்தபடி தேன்குழல் இன் என்று போட்டு பக்கத்தில் ஒரு கொடி படத்தை போட்டு இருக்கிறார். அதை நன்றாக உற்றுப் பார்த்தால் ஸ்பெயின் நாட்டு கொடியாக தெரிகிறது. இந்தக் கொடியும் நடிகர் விஜய்யும் தமிழக வெற்றி கழகத்தின் கொடியின் வண்ணமும் ஒரே மாதிரி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். திரிஷா விஜய் கட்சியில் இணைய போகிறாரா? மாநாட்டில் கலந்து கொள்ள போகிறாரா என்று குழப்பத்தில் இருக்கின்றனர். ஏற்கனவே விஜய்யையும் திரிஷாவையும் வைத்து பாடகி சுசித்ரா சர்ச்சையான கருத்துக்களை கூறி வந்திருந்தார். இவர் இந்த பதிவு எதற்காக போட்டிருக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
