விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பையும் வெற்றியையும் தொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகின்றது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முதல் பாகத்தில் நடித்தவர்களில் ஸ்டாலின், ஹேமா மற்றும் வெங்கட் உள்ளிட்ட ஒரு சிலர் இரண்டாவது சீசனிலும் நடிக்கிறார்கள். இரண்டாவது சீசன் மக்களை வெகுவாக கவர்ந்து விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் தங்கமயில் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சரண்யா துராடி. தன்னுடைய நடிப்பு மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இந்த சீரியலில் தங்கமயில் நல்லவளா, கெட்டவளா அல்லது பில்லியா என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு குழம்பும் வகையில் அவருடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து வருகின்றார்.

முதலில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய சரண்யா, ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி மற்றும் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து சின்ன திரையில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் கதாநாயகியாக நடிக்க தொடங்கி அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த சீரியல் முடிந்த பிறகு சன் டிவியில் வெற்றி பெற்றார் ரோஜா சீரியலின் தெலுங்கு ரீமேக்கில் சரண்யா நடித்து அசத்தினார். இந்த சீரியல் ஜெமினி டிவியில் ஒளிபரப்பானது.
தொடர்ந்து சன் டிவியில் ரன் மற்றும் தெய்வமகள் சீரியல்களில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனதிலும் குடியேறினார். பிறகு விஜய் டிவியில் ஆயுத எழுத்து சீரியலில் கதாநாயகியாக நடித்தார். அந்த சீரியலுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால் அந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வந்தது.

தற்போது சரண்யா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் தங்கமயில் கதாபாத்திரத்தில் கலக்கல் ஆக நடித்து வருகின்றார். இந்த சீரியலில் மாமனாரிடம் நல்ல பெயரை வாங்க வேண்டும் என்பதற்காக வீட்டில் எல்லா வேலைகளையும் எடுத்து போட்டு செய்யும் தங்கமயில் வீட்டில் உள்ள மற்ற அனைவரையும் மாமனாரிடம் போட்டுக் கொடுத்து நல்ல பெயர் வாங்கிக் கொண்டு குடும்பத்தில் அவ்வபோது குண்டை தூக்கிப்போடுகிறார்.

இந்த நிலையில் சரண்யா சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டம் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் நடைபெற்று உள்ளது. உடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் பலரும் கேக் வெட்டி சரண்யா பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளனர்.

அதேசமயம் சரண்யாவின் கணவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
