இந்த சமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். மாதா பிதா குரு தெய்வம் என்பதற்கு போல தாய் தந்தையருக்கு அடுத்தபடியாக நம் நாட்டில் வைத்து போற்றப்படுபவர்கள் ஆசிரியர்கள். ஏனென்றால் பிறந்து நான்கு வயதான உடனே அந்த குழந்தை பள்ளிக்கு செல்கிறது. அதிலிருந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக நம் குழந்தைகளை செதுக்குவதை நல்ல வழியில் அவர்களது திறமையை வெளிக் கொண்டு சாதிக்க வைப்பது ஆசிரியர்கள் தான்.

ஒவ்வொரு மாணவரின் சாதனைக்கு பின்னாலும் ஆசிரியரின் பங்கு அதிகமாக இருக்கும். சுயநலம் அற்று தன்னலம் அற்று பணியாற்றுபவர்கள் ஆசிரியர்கள். தங்களிடம் படித்த மாணவன் ஒரு பெரிய இடத்திற்கு செல்கிறான் என்றால் அந்த மாணவனை காட்டிலும் அவர்களின் பெற்றோரை காட்டிலும் அதிகப்படியாக மகிழ்ச்சியடைபவர்கள் ஆசிரியர்கள். இப்படிப்பட்ட ஆசிரியர்களை நாம் போற்ற வேண்டும்.
அந்த முயற்சியில் தான் தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் சிறந்த ஆசிரியரை தேர்ந்தெடுத்து கனவு ஆசிரியர் என்ற பட்டம் வழங்குகிறது. அப்படி கடந்த 2023 ஆம் ஆண்டு 54 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் விருதை வென்றிருக்கின்றனர்.

தற்போது இந்த கனவு ஆசிரியர் விருதை வென்ற 54 ஆசிரியர்களை பிரான்ஸ் நாட்டிற்கு தமிழக அரசு சார்பாக கல்வி சுற்றுலா அழைத்து செல்கின்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர்கள் புறப்பட்டனர். இதுபோன்று அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை வெளிநாட்டு சுற்றுலா கூட்டி செல்வது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்று ஆசிரியர்கள் பெருமிதத்தோடு பேசி இருக்கின்றனர்.
