அஜித் எல்லோருக்கும் கொடுக்கும் Finance அட்வைஸ் இதுதான்.. ஓபனாக சொன்ன இயக்குனர் ஹெச்.வினோத்..!

By Nanthini on ஐப்பசி 23, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் தயாராகியுள்ளது. லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அஜர்பைஜானில் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் மீதம் ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட உள்ளது. டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

ஆனால் அதற்கு முன்னதாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடித்து வரும் மற்றொரு திரைப்படமான குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அஜித் மற்றும் ஆதிக் என வித்தியாசமான கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. கட்டாயம் அஜித்தின் திரைப்படம் வித்தியாசமான படமாக இந்த திரைப்படம் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் வரலாறு திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இப்படத்தின் மூலம் அஜித் மூன்று ரோல்களில் நடிக்கின்றார். இதுவும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

   

 

இந்நிலையில் அஜித் பற்றி பலரும் அறியாத ஒரு உண்மையை இயக்குனர் ஹெச். வினோத் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பகிர்ந்து உள்ளார். அதில், அஜித் சார் கிட்ட ரொம்ப பிடிச்சது, அவர் அக்கவுண்ட்டை அவரே மெயின்டன் பண்ணிட்டு இருக்காரு. அவர் எல்லாருக்கும் பொதுவா சொல்ற ஒரு அட்வைஸ் என்னன்னா, நீங்க வருமான வரி கற்றபங்களா இருந்தா அந்த பணத்தை எப்பவுமே நீங்க சம்பாதிக்கிற பணத்தில் இருந்து தனியா எடுத்து வையுங்கள். அது உங்களோட பணம் இல்லை என்று நினைத்து தனியா எடுத்து வச்சிருங்க. அப்படி நினைச்சா தான் வரி கட்டும்போது உங்களுக்கு எந்த வருத்தமும் வராது.

ஏமாற்றலாம் அல்லது தப்பு கணக்கு காட்டலாம் என்ற எந்த ஒரு யோசனையும் உங்களுக்கு வராது. மீதி இருக்க பணத்துல ஒரு 10% பணத்தை உதவி செய்வதற்கு என்று தனியா எடுத்து வச்சிருங்க. நீங்க வசதியா இருக்கும்போது நாலு பேருக்கு உதவி பண்ணலாம், கண்டிப்பா உங்க கிட்ட யாராவது உதவி கேட்டு வருவாங்க. அதுல கரெக்டானவங்களுக்கு அந்த பணத்தை எடுத்துக் கொடுத்து உதவி செய்யுங்க. மீதி இருக்கிற பணம் தான் உங்களோட பணம். அந்த பணத்தை வைத்து உங்கள் லைஃப்ல என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிக்கோங்க. இப்படி பண்ணா எந்த குழப்பமும் இருக்காது. வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லாம நிம்மதியாக வாழலாம் என்று அஜித் எல்லோருக்கும் அட்வைஸ் கூறுவார் என வினோத் கூறியுள்ளார்.