தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் கருணாஸ். 2001 ஆம் ஆண்டு சூர்யா நடித்த நந்தா திரைப்படம் மூலம் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தான் நடித்த முதல் படத்திலேயே காமெடியால் மக்களை ஈர்த்த கருணாஸ் நடிப்பில் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு முன்னேறினார். அதன்படி வில்லன், புதிய கீதை, திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், பாபா மற்றும் பொல்லாதவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக கருணாஸ் கலக்கி இருப்பார். குறிப்பாக திருடா திருடி மற்றும் படிக்காதவன் உள்ளிட்ட பல படங்களில் இவர் பேசிய காமெடி டயலாக் என்றும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. இப்படி நகைச்சுவை நடிகராக வலம் வந்த கருணாஸ் திண்டுக்கல் சாரதி என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.

அந்தப் படங்களும் அவருக்கு ஓரளவு வரவேற்பை பெற்று தந்தன. அதன் பிறகு பட வாய்ப்புகளை குறைத்துக் கொண்டு அரசியலில் கருணாஸ் களமிறங்கினார். நடிகர் கருணாஸின் மனைவி கிரேஸ். அவரும் ஒரு பிரபல நட்சத்திரம் மற்றும் நாட்டுப்புற குத்து பாடல்களுக்கு தயார் போனவர் தான். சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய், திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பாடல்கள் இவரையும் மக்களுக்கு அடையாளம் காட்டிய பாடல்களாகும். அது மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார். வருமான உடல் மற்றும் பாய் கட் இதுதான் அவருடைய அடையாளம். நீண்ட காலமாகவே அவர் அப்படித்தான் இருக்கிறார். கருணாஸ் மற்றும் கிரேஸ் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டனர்.

பாடல்கள் பாடுவதன் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் சமீபத்தில் தான் அவருடைய மகள் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் கருணாஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒரு தகப்பன் ஒரு பிள்ளை கிட்ட இதெல்லாம் பேச முடியுமா என்ற ஒரு யோசனை இருக்கும். ஆனா நான் அப்படி கிடையாது எல்லாத்தையும் என் பையன் கிட்ட பேசிடுவேன். நான் கையில கிளாஸ்வோட உக்காந்துட்டனா என் பையன் முடிவு பண்ணிடுவான் அப்பா நம்ம கிட்ட பெருசா கிளாஸ் எடுக்க போறாருன்னு.

நான் இதை பெருமையா இந்த இடத்துல சொல்ல விரும்புறேன் இதுவரைக்கும் அதிகபட்சமாக என் பையன் கிட்ட நான் ஒரு பத்துமுறை தான் பேசி இருப்பேன். அவன் 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு தான் அவன் கிட்ட நான் பேசவே ஆரம்பிக்கிறேன். ஏன்னா அந்த 16 வயசுக்கு மேல தான் பசங்கள நம்ம விருப்பத்துக்கு ஏத்த மாதிரி கொண்டு வர வயசு. அப்போ சொன்னா தான் அவங்களுக்கும் புரியும். நான் அவனுக்கு கொடுத்த அட்வைஸ் பத்தி அவன் எதுவுமே சொன்னதில்லை நான் சொல்றத அப்படியே கேட்டுப்பான் ஒரு டைம் கூட அவன் முகம் சுளிச்சதே இல்ல என்று தன் மகன் பற்றி பெருமையாக பேசி உள்ளார்.
