“கட்டம் கட்டி கலக்குவேன்”.. விஜய் பட தயாரிப்பு நிறுவனத்தை தனது அடுத்த படத்திற்கு புக் செய்த சிம்பு… இயக்குனர் இவரா..?

By admin on ஐப்பசி 21, 2024

Spread the love

பிரபல நடிகரான சிம்பு நேற்று தனது சோசியல் மீடியா பக்கத்தில் டேய் 2k கிட்ஸ் 90ஸ் மோட்ல நாளைக்கு ஷார்ப்பா 6.06-க்கு வரேன் என்று குறிப்பிட்டிருந்தார். அது புதிய படத்திற்காகவா அல்லது பாடலுக்காகவா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில் தற்போது சிம்பு தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

   

பிரபல இயக்குனரான அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். அஸ்வத் கடந்த 2020-ஆம் ஆண்டு ரிலீசான ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார்.

   

 

இவர் பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் என்ற படத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறார். அஸ்வத் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. தம் படத்தில் கலக்குவேன் கலக்குவேன் கட்டம் கட்டி கலக்குவேன் என்ற பாடலில் கையில் கை குட்டை கட்டி சிம்பு ஒரு போஸ் கொடுப்பார்.

அதேபோல போட்டோவை வெளியிட்டு கட்டம் கட்டி கலக்குறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த சிம்பு ரசிகர்கள் அவரை பழைய லுக்கில் பார்க்க போகிறோம் என மகிழ்ச்சியில் உள்ளனர். காதல் தோல்வி, நட்பில் தோல்வி, உடல் பருமன் என சினிமாவில் தலை காட்டாமல் இருந்த சிம்பு மீண்டும் பழைய சிம்புவாக சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.