இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டன் பதவி இவருக்கு தான்.. நல்லா வெச்சி செய்ய போறாங்க..!

By Nanthini on ஐப்பசி 21, 2024

Spread the love

விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசர்களை கடந்துள்ள நிலையில் தற்போது எட்டாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனை மக்கள் செல்வம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் ஆறாம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை தற்போது இரண்டு வாரங்களை நிறைவு செய்துள்ளது. இதில் மக்களுக்கு பரிச்சயமான போட்டியாளர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Bigg Boss Tamil 8: காதல் தோல்வி, கன்வின்ஸ் செய்த அர்னவ், மன அழுத்தம் -  அன்ஷிதா குறித்து நண்பர்கள்|biss boss tamil 8 contestant anshitha's  personnel story

   

போட்டியாளர்கள் உள்ளே வந்த சில மணி நேரத்திலேயே ஆட்டமும் தொடங்கிவிட்டது. இந்த முறை ஒரே வீட்டில் ஆண் போட்டியாளர்கள் மற்றும் பெண் போட்டியாளர்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடுகின்றன. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய 24 மணி நேரத்தில் மகாராஜா பட நடிகை சாச்சனா எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் அவர் உள்ளே வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

   

 

இதனை தொடர்ந்து நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் அர்ணவ் வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், இந்த வாரம் கேப்டன் பதவிக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வெற்றி பெற்று போட்டியாளர் தர்ஷிகா பிக் பாஸ் வீட்டின் கேப்டன் ஆகியுள்ளார். அதேசமயம் டாஸ்க் பங்கேற்ற ரஞ்சித்துக்கு பலத்தடியும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஜெஃப்ரி பெண்கள் டீமுக்கும் சாச்சனா ஆண்கள் டீமுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.