வேட்டையன் ஸ்பெஷல்… படக்குழுவுக்கு தடபுடலாக விருந்து வைத்த தயாரிப்பு நிறுவனம்…!!

By admin on ஐப்பசி 20, 2024

Spread the love

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் கடந்த பத்தாம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஞானவேல் ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கி வெற்றி பெற்றவர். வேட்டையன் திரைப்படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாஸில், மஞ்சுவாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

   

வேட்டையன் திரைப்படத்தை 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கினார்கள். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசான வேட்டையன் திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றது. ரஜினிகாந்த் ரசிகர்கள் வேட்டையன் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். வேட்டையன் படம் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

   

#image_title

 

வேட்டையன் படம் வெற்றி பெற்றதால் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு தயாரிப்பு நிறுவனம் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. அதில் பட குழுவினர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தடபுடலாக பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Behindwoods (@behindwoodsofficial)