அசைவ சாப்பாடுகளில் மீன் சாப்பாடு என்றால் ஒரு சில பேருக்கு தனி பிரியம் தான். விதவிதமான வகை வகையான மீன்கள் சாப்பிடுவதற்கு கிடைக்கின்றன. ஆனால் அந்த மீன்கள் எல்லாம் எங்கிருந்து வருகிறது. மீனவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து கடலுக்கு சென்றால்தான் மீன்கள் நமக்கு கிடைக்கும்.

அப்படியே மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது பல அரிய வகையான உயிரினங்கள் அவர்கள் வலையில் சிக்குவதுண்டு. அரிய வகை மீன்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை போன்றவைகள் வலையில் சிக்கினால் அதை மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் விட்டுவிடுவார்கள். அதுபோல ஒரு உயிரினம் தான் மீனவர்களின் வலையில் சிக்கியிருக்கிறது. அது என்னவென்று இனி காண்போம்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது அவர்கள் வலையில் 3 கிலோ எடையுள்ள மிகப்பெரிய நண்டு சிக்கி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அந்த நண்டு வயிற்றில் 8 லட்சத்திற்கும் அதிகமான முட்டைகள் இருந்திருக்கிறது. உடனே மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து இருக்கின்றனர்.

அதன்படி இந்த நண்டு வெண்டிலேட்டர் உதவியுடன் பெட்டியில் வைக்கப்பட்டு அந்தமானுக்கு விமானத்தில் செல்கிறது. அங்கு மீன் குஞ்சு பொரிப்பு ஆய்வகத்தில் இந்த நண்டு விடப்பட்டு அந்த 8 லட்சம் முட்டைகளும் பொறித்த பிறகு அங்கிருக்கும் அதிகாரிகள் பாதுகாப்பாக கடலில் விட்டு விடுவார்கள் என்று கூறப்படுகிறது. இத்தனை லட்சம் முட்டைகளை வைத்திருந்த அந்த நண்டை அங்கிருந்தவர்கள் ஆச்சர்யாத்துடன் பார்த்து சென்றனர்.
