தமிழ் சினிமாவுக்கு இயக்குனர் ஷங்கரால் அறிமுகப்படுத்தப் பட்டவர் பரத். பாய்ஸ் படத்தில் ஐந்து பேரில் ஒருவராக தோன்றிய அவரை அதன் பின்னர் தான் தயாரித்த காதல் படத்தில் கதாநாயகனாக்கி வெற்றி படத்தைக் கொடுத்து ஒரு ஹீரோவாக்கினார். அதன் பின்னர் பரத் அடுத்தடுத்து சில ஹிட்ஸ்களைக் கொடுத்து நம்பிக்கை அளிக்கும் ஹீரோவானார்.
தமிழ் மட்டும் இல்லாமல், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்தார். இவரின் முழு பெயர் பரத் ஸ்ரீனிவாசன் என்பதாகும். திருச்சியில் பிறந்து வளர்ந்த நடிகர் பரத் பயிற்சி பெற்ற நடன கலைஞரும் ஆவார்.
பட்டியல், எம் மகன், வெயில், பழனி, கண்டேன் காதலை, வானம், 555, காளிதாஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். எம் மகன் திரைப்படம் இவருக்கு நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று தந்தது. இது தவிர கூடல் நகர், நேபாளி, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, சேவல், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி போன்ற படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் பரத்துக்கு நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றுத் தந்தன.

#image_title
இப்படி வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த பரத் இப்போது தமிழ் சினிமாவில் வணிகமதிப்பு இல்லாத ஒரு நடிகராகப் போராடிக் கொண்டிருக்கிறார். இப்போது தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றோர் இருக்க வேண்டிய இடத்தில் பரத்தும் இருந்திருக்க வேண்டும். ஆனால் மோசமான மசாலா படக் கதை தேர்வுகளால் பரத் சறுக்கினார். அதேபோல வளர்ந்து வரும் காலகட்டத்தில் சின்னத் தளபதி என்ற பட்டத்தைப் போட்டுக்கொண்டு ரசிகர்களுக்கு அவர் மேல் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தினார்.
பழனி போன்ற தனக்கு ஒத்துவராத கமர்ஷியல் மசாலா கதைகளை தேர்வு செய்து தன்னைத்தானே வீணடித்துக் கொண்டார். சமீபத்தில் சின்னத்தளபதி பட்டம் குறித்து பேசிய பரத் “சின்னத் தளபதி பட்டம் போட்ட பின்னர்தான் படங்கள் ஓடவில்லையா எனக் கேட்கின்றனர். அப்படி ஒல்லை பழனி படம் எல்லாம் ஓடியது. ஒரு கட்டத்தில் எல்லா நடிகர்களும் பட்டம் போடுவதை நிறுத்தினார்கள். அதனால் நானும் அதை எடுத்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.
