படப்பிடிப்பில் 60 பேர் முன்பு பிரபுவை இன்சல்ட் செய்த பிரபலம்.. கோபத்தில் பிரபு என்ன செய்தார் தெரியுமா..?

By Nanthini on ஐப்பசி 17, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பல அற்புதமான திரைப்படங்களை மக்களுக்கு கொடுத்து பிரபலமான இயக்குனராக வலம் வந்தவர் தான் இயக்குனர் தங்கர்பச்சான். அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம் மற்றும் அம்மாவின் கைபேசி போன்ற நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். இவருடைய படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இறுதியாக இவர் பாரதிராஜா, கௌதம் மேனன், யோகி பாபு மற்றும் அதிதி பாலன் உள்ளிட்டோர் நடிக்க கருமேகங்கள் கலைகின்றன என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இயக்குனராக மட்டுமல்லாமல் இவர் அதிக திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார். இந்த நிலையில் தங்கர் பச்சான் பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ள இயக்குனர் பாலாஜி பிரபு, தங்கர் பச்சான் ஒரு சிறந்த நடிகர். நடிகை லக்ஷ்மி ப்ரொடியூசர் ஆகவும், அவருடைய கணவர் இயக்குனராகவும் பணியாற்றிய திரைப்படம் தான் ரத்த தானம்.

   

அந்தப் படத்தில் பிரபு சார் ஹீரோவாக நடித்தார். அப்போது இப்படத்திற்கான ஒரு பாடல் படப்பிடிப்பு நடந்தது. இதில் தங்கர்பச்சான் அசிஸ்டன்ட் கேமரா மேன் ஆக பணியாற்றினார். அந்த படப்பிடிப்பில் குதிரையில் வந்து பிரபு சார் ஒரு இடத்தில் இறங்கி நிற்க வேண்டும். சினிமாவை பொறுத்தவரையில் ஒரு மார்க் வைக்கப்படும். அந்த இடத்தில் இருந்தால்தான் கேமராவிற்கு சரியாக காட்சி புலப்படும் என்பதால் ஏதாவது ஒரு அடையாளத்தை வைத்திருப்பார்கள். அதன்படி பிரபு நடிக்கக்கூடிய காட்சியிலும் ஒரு மார்க் வைக்கப்பட்டிருந்தது.

   

 

அந்த சமயத்தில் குதிரையிலிருந்து வந்து இறங்கிய பிரபு மார்க் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் எங்க மார்க் உள்ளது என்று கேட்டு சத்தம் போட்டு உள்ளார். உடனே அந்த இடத்திற்கு சென்ற தங்கர் பச்சான், சார் இதுதான் உங்க நடிப்பை கொட்ட வேண்டிய இடம் என்று கூறி கிண்டலாக சிரித்துள்ளார். இதனைப் பார்த்து அங்கிருந்து அனைவருமே சிரித்து விட்டனர். இதனால் கோபமடைந்த பிரபு கேமராமேன் விசு நடராஜை பார்த்து, நடராஜ் அடுத்த ஷாட் வரும்போது இந்த பையன் இங்க இருக்க கூடாது என்று கோபமாக கூறியுள்ளார் என்று பாலாஜி பிரபு படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.