திருப்பதியில் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்த அஜித் பட நடிகை.. வைரலாகும் வீடியோ..!

By Nanthini on ஐப்பசி 17, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 90களில் இளைஞர்களின் கனவு கனியாக வலம் வந்தவர் தான் நடிகை மந்த்ரா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் விஜய் மற்றும் அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவரைப் பார்ப்பதற்காகவே திரைப்படங்களை பார்க்கச் சென்ற ரசிகர்கள் கூட்டமும் அதிகம். விஜயா என்ற பெயரை நிஜ பெயராகக் கொண்டிருந்தாலும் இவர் தெலுங்கு சினிமாவில் ராசி என்ற பெயரிலும் தமிழ் சினிமாவில் மந்த்ரா என்ற பெயருடனும் வலம் வந்தார்.

   

ஆந்திர மாநிலத்தை பூர்விகமாகக் கொண்ட இவர் தமிழில் முதன்முதலாக 1996 ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான பிரீமியம் என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு விஜய் நடிப்பில் வெளியான லவ் டுடே மற்றும் அஜித் நடிப்பில் வெளியான ரெட்டை ஜடை வயசு உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் இவர் ஹீரோயினியாக நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வந்தார். ஒரு கட்டத்தில் கவர்ச்சி நடிகை என்ற முத்திரை குத்த ஆரம்பித்ததால் சினிமாவில் இருந்து விலகினார்.

   

 

இதனைத் தொடர்ந்து தெலுங்கு உதவி இயக்குனரான ஸ்ரீ ஹர்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஹைதராபாத்தில் செட்டில் ஆனார். இவருக்கு தற்போது ஒரு அழகிய பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பிறகும் தெலுங்கு படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் நடிகை மந்த்ரா திருப்பதியில் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.