ராஜஸ்தானில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் பிறந்து வளர்ந்தவர் சிஜூ. இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். அதனால் சிறு வயதிலேயே அவர் உழைக்க வேண்டிய காலகட்டம் உருவானது. ஆரம்பத்தில் டெல்லிக்கு சென்று food hut நிறுவனத்தில் குழு உறுப்பினராக பணியாற்ற தொடங்கினார். அங்கு உணவாகத்தை சுத்தம் செய்வது முதல் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வது மற்றும் பாத்திரங்களை சுத்தம் செய்வது போன்ற அனைத்து பணிகளையும் செய்து வந்தார் சிஜூ.

20 ஆண்டுகளுக்கும் மேலாக உணவகங்களில் ஒவ்வொரு பதவிலும் பணியாற்றிய சிஜூ அதற்கு பிறகு பிரைட் சிக்கன் தலைமை அதிகாரியாக ஆனார். அப்போது தான் சிறிய அளவிலான தெரு ஓராக்கடைகளை சுகாதாரத்துடன் அதிக தரத்துடன் கொடுக்க வேண்டும் அப்படி ஒரு வணிகத்தை தொடங்க வேண்டும் என்று சிஜூவுக்கு தோன்றியது. உணவுத்துறையில் அவரது பல வருட அனுபவம் அவரது சிந்தனைக்கு கை கொடுத்தது.
ஏன் வெளிநாட்டு உணவுகளில் மட்டுமே மக்களுக்கு மோகம் இருக்கிறது. இந்திய உணவுகளும் அதற்கு இணையானவைகள் தானே என்று சாட்டு உணவுகளை வைத்து ரோல்ஸ்கள், சாண்ட்விச்சுகள், ஷேக்ஸ், ஃபியூஷன் உணவுகள், பர்கர், பீட்சா ஆகியவற்றை கொண்டு The Chatpatta Affair என்ற ஒரு சிறிய அளவிலான வணிகத்தை தொடங்கினார் சிஜூ.

ரூ. 5 லட்சம் முதலீட்டுடன் தொடங்கப்பட்ட The Chatpatta Affair சாட் உணவகத்தில் பாத்திரம் கழுவுவது முதல் அனைத்து வேலைகளையும் அர்ப்பணிப்போடு பணி செய்தார் சிஜூ. அவரின் இந்த முயற்சி படிப்படியாக வெற்றி அடைந்து தற்போது நாடு முழுவதும் இந்த The Chatpatta Affair 50 இடங்களில் உணவு விற்பனை நிலையத்தை உருவாக்கி இருக்கிறார். தற்போது இவரது The Chatpatta Affair பிராண்டை Franchise ஆக மாற்றி ஒவ்வொரு நகரத்திலும் உருவாக்கிக் கொண்டு வந்திருக்கிறார். வெறும் 5000 சம்பளத்திற்கு ஹோட்டல் ஊழியராக பணியாற்றிய சிஜு தற்போது ஆண்டிற்கு 8 கோடி வருமானம் ஈட்டி வருகிறார்.
