தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். மாபெரும் பட்ஜெட்டில் உருவான கங்குவா திரைப்படம் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. கங்குவா படத்தின் மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஒரு பாடத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அந்தமான், ஊட்டி, கேரளா, சென்னை உள்ளிட்ட இடங்களில் சூர்யா 44 வது பட சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டது.

விரைவில் இந்த படத்தின் டைட்டிலும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகும் எனது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்குவதாக தகவல் வெளியானது. அந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளாராம். அதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் நடிகை காஷ்மிரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் சிகப்பு மஞ்சள் பச்சை படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர். ஆர்.ஜே பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக “Hint” என பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் உலா வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

#image_title
