“சித்தார்த் 40” திரைப்படத்தில் இசையமைப்பாளராக இணைந்த பிரபல பாடகியின் மகன்.. யாருன்னு தெரியுமா..?

By Nanthini on ஐப்பசி 16, 2024

Spread the love

தமிழில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் புதிய திரைப்படம் அவருடைய 40வது திரைப்படமாகும். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக சித்தார்த்த 40 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மாவீரன் திரைப்படத்தை தயாரித்த அருண் விஷ்வா தனது நிறுவனம் மூலம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளராக பிரபல இசையமைப்பாளர் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் சித்தார்த் தன்னுடைய படங்களுக்கு புதிய இசை அமைப்பாளர்களுடன் கைகோர்ப்பதில் ஆர்வமாக உள்ளார்.

   

இவருடைய இந்த முயற்சி முந்தைய திரைப்படங்களுக்கும் சிறந்த இசையையும் பாடல்களையும் கொடுத்தது. அதன்படி தற்போது அவருடைய 40வது திரைப்படத்திலும் புதிய இசையமைப்பாளருடன் கைகோர்க்க நினைத்தவர் அம்ரித் ராம்நாத் உடன் இணைந்துள்ளார். வசீகரா மற்றும் ஒன்றா இரண்டா போன்ற பாடல்களில் தனது குரல் வளத்தால் நம்மை அலாதியான இசை அனுபவத்தில் திளைக்க வைத்தவரும், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட லைப் ஆஃப் பை படத்தில் உலகப் புகழ்பெற்ற பாடலை பாடியவர்மான பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன்தான் அம்ரித் ராம்நாத். இசை ஆர்வம் அதிகம் உள்ள இவர் 25 வயதில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

   

 

இவர் திரைப்படங்கள் மற்றும் சுயாதீன ஆல்பங்கள் இரண்டுக்கும் இசையமைத்துள்ளார். பிரணவ் மோகன்லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த சூப்பர் ஹிட் மலையாள திரைப்படமான வருஷங்களுக்கு சேஷம் என்ற திரைப்படத்தில் இவர் இசையமைத்த ஞாபகம் பாடல் அதிக பாராட்டுக்களை பெற்றது. இதனை தொடர்ந்து சித்தார்த்த 40 திரைப்படத்தின் மூலம் தமிழ் துறையில் இவர் அறிமுகமாகி இருப்பது பல நல்ல பாடல்களை தரும் என்று உறுதியாக நம்பலாம். சித்தார்த் நாப்பது திரைப்படம் திட்டமிட்டபடி சிறப்பாக உருவாகி வருவது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த அடுத்தடுத்து அப்டேட்டுகளை படக்குழு விரைவில் வெளியிடும் என தெரிகிறது.