இறந்தவர் வீட்டில் தகராறு செய்த கூட்டம்… வாக்கு கொடுத்து நடத்தி காட்டிய MGR…

By admin on ஐப்பசி 15, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். இன்றளவும் இவருக்கு என்று ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நடிகராக மட்டுமல்லாமல் தமிழக முதலமைச்சராக சிறப்பாக ஆட்சி நடத்தியவர் MGR.

   

குடும்ப வறுமையின் காரணமாக சாப்பாட்டிற்கே வழியில்லாமல் கஷ்டப்பட்ட MGR நாடகத்திற்கு நடிக்க வந்தார். அதற்குப் பிறகு சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து பிறகு நடிகராக உயர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ராஜ்யத்தை உருவாக்கியவர் MGR.

   

MGR நடித்து வெளியான படங்களில் பெரும்பாலானவை ஹிட்தான். மேலும் இவரது படங்களில் சமூகநீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். இதனால் மக்கள் இவரை பெரிதும் ரசித்தனர். இவருடன் நடிகைகள் போட்டி போட்டு நடிப்பதற்கு விரும்புவார்கள். அவர் அதிகமாக இணைந்து நடித்த நடிகைகள் சரோஜாதேவி மற்றும் ஜெயலலிதா ஆகியோர்தான்.

 

நாடித்துக் கொண்டிருக்கும் போதே திராவிட கட்சிகளில் இணைந்து பணியாற்றிய MGR தனியாக கட்சி ஆரம்பித்து மக்களுக்காக சேவை செய்ய வேண்டி தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராக பதவியேற்று சிறப்பாக பணியாற்றினார். தான் இறக்கும் வரையிலும் முதலமைச்சராகவே இருந்தார் MGR. தான் வாழ்ந்த காலத்தில் வாரி கொடுக்கும் வள்ளலாகவும் கர்ணனாகவும் மட்டுமல்லாமல் சொன்ன சொல் தவறாதவராகவும் இருந்திருக்கிறார் MGR. அதற்கு ஒரு சம்பவம் இருக்கிறது.

தமிழ் சினிமாவில் முதன்முதலாக நடிகர்களுக்கு பின்னணி பாடியவர் திருச்சி லோகநாதன். இவருக்கு திருமணம் செய்து வைத்தவர் கலைவாணர் என் எஸ் கே. திருச்சி லோகநாதன் ஊர் திருவிழாக்களுக்கு கச்சேரிக்கு செல்வார். அப்படியே ஆரணியில் ஒரு கச்சேரிக்கு செல்ல வேண்டிய நாளன்று என்.எஸ்.கே காலமானார். அப்போது அங்கு எம்ஜிஆர் முதற்கொண்டு எல்லோரும் கூடியிருந்தனர்.

ஆரணியில் கச்சேரி புக் பண்ணி இருந்த ஊர்காரர்கள் வந்து திருச்சி லோகநாதனை உடனே வர சொல்லி சண்டையிட்டனர். அப்போது அங்கிருந்து MGR இன்னைக்கு நாங்க எல்லாரும் சோகத்தில் இருக்கோம். இன்னைக்கு அவர் பாட வர மாட்டார். நீங்க போயி உங்க மக்களுக்கு சொல்லி புரிய வைங்க ஒரு நாள் என் சொந்த ஏற்பாடுல திருச்சி லோகநாதனை நான் பாட வைக்கிறேன் என்று சொன்னாராம் MGR. சொன்ன சொல் தவறாமல் சிறிது நாட்கள் கழித்து விமர்சையாக அவரது ஏற்பாட்டில் திருச்சி லோகநாதனை பாட வைத்திருக்கிறார் MGR.