நானும் பல முறை தற்கொலைக்கு முயன்றேன்.. ஆனா.. முதல்முறையாக மனம் திறந்த காதல் சரண்யா..!!
நானும் பல முறை தற்கொலைக்கு முயன்றேன்.. ஆனா.. முதல்முறையாக மனம் திறந்த காதல் சரண்யா..!!
By Nanthini on ஐப்பசி 14, 2024
Spread the love
தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் காதல். இந்த திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை சந்தியா. இந்த திரைப்படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளது. இந்த திரைப்படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்தவர் தான் நடிகை சரண்யா நாக். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் 1998 ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான காதல் கவிதை என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்தார்.
அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் காதல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு துல்லுற வயது என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அதே சமயம் ஒரு வார்த்தை பேசு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகி இருந்தார். ஆனால் சில காரணங்கள் எல்லாம் அந்த திரைப்படம் பாதியில் கைவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தெலுங்கில் டென்த் கிளாஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இருந்தாலும் அந்த திரைப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைந்த சரண்யா 2009 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை என்ற திரைப்படத்தில் 5 பெண்களில் ஒருவராக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.இவர் இறுதியாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஈர வெயில் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு எந்த ஒரு பட வாய்ப்புமும் கிடைக்காத நிலையில் ஒரு சில குறும்படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சரண்யா சமீபத்தில் அளித்த பேட்டியில், நானும் பல முறை தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றேன். என் வாழ்க்கையில நான் நிறைய பார்த்து இருக்கேன். இங்க நிறைய பேர் நடிச்சுக்கிட்டு தான் இருக்காங்க. ரியல் லைப் வேற மாதிரி இருக்கும். சில நேரங்களில் மிருகங்களை பார்க்கும் போது மனிதர்களுக்கு இவை பரவாயில்லை என்று எனக்குத்
தோன்றும். இப்போது தற்கொலை செய்து கொள்ள முயன்றதை நினைத்தாலும் அது அசிங்கமாக இருக்கிறது, பின்னர் எதற்கு நான் சாக வேண்டுமென யோசித்து அந்த முட்டாள் தனமான முடிவை தூக்கி போட்டுவிட்டு வெளியேறினேன். வாழ்வதற்கான தைரியம் என்னிடம் இருந்தது. சாவதற்கு அதைவிட அதிக தைரியம் தேவை என நினைக்கிறேன். பல விதமான கஷ்டத்தில் சிக்கி மீண்டு வெளியே வந்திருந்தாலும், எப்போதும் என்னுடைய சிரிப்பு மட்டும் எந்த நிலையிலும் மாறவில்லை என சரண்யா நாக் பேசியுள்ளார்.