பிரபல யூடியூபரான டிடிஎப் வாசன் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி இளைஞர்களிடையே பிரபலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிடிஎஃப் பார்சல் வாசன்மஞ்சள் வீரன் என்ற படத்தில் ஹீரோவாக நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. அந்த படத்தின் போஸ்டரும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த படத்தை செல்அம் இயக்கினார். படத்தின் ஷூட்டிங் கொஞ்சம் நாட்கள் மட்டும் முடிவடைந்த நிலையில் இயக்குனர் டிடிஎஃப் வாசனை அடுத்த சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சள் வீரன் படத்தின் இயக்குனர் செல்அம் மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் முழுமையாக நீக்கப்படுவதாக கூறினார். அவருக்கு பதிலாக வேறு ஒரு கதாநாயகன் அந்த படத்தில் நடிக்க போவதாக செல்அம் வைத்திருந்தார்.

TTF வசனுக்கு பதிலாக கூல் சுரேஷ் மஞ்சள் வீரன் படத்தின் ஹீரோவாக நடிக்க போவதாக கூறப்பட்டது. அந்த வீடியோவில் கூல் சுரேஷ் பேசியதாவது நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதுதான். நீங்க உன் மனசுக்குள்ள உன்ன நினைக்கிறீங்க அதுதான். அது என்ன அப்படிங்கறத விரைவில் உங்களுக்கு செய்தி வரும் பொறுத்திருந்து பாருங்கள் எனக் கூறியுள்ளார்.

மேலும் மஞ்சள் வீரன் பட இயக்குனரை நோக்கி மலர்களை வீசி மஞ்சள் வீரனே வா, மாமன்னனே வா, மகா தேவனே வா, மாமல்லபுரம் சிற்பமே வா, மதுரையின் வீரனே வா, மங்காத செல்வமே வா, மங்கையர்களின் இளவரசனை வா இப்படி பல செல்வங்களுக்கு சொந்தக்காரர் செந்தில் செல்அம் அவர்கள். இதுக்கு மேல சொன்னா உங்களுக்கு என்ன விஷயம்னு தெரிஞ்சிரும். பொறுத்திருந்து பாருங்க. ஐ லவ் யூ ஆல் என அதில் பேசியுள்ளார்.
Cool Suresh Rocked💥
TTF Vasan Shocked🙄Cool Suresh in ‘Manjal Veeran’ Directed by Chellam#ManjalVeeran #Chellam #CoolSuresh #TTFVasan @iamcoolsuresh @ttfvason @TTFvasanArmy pic.twitter.com/nnbaUq63xg
— Ranjith Kannan (@PaRanjithKannan) October 14, 2024
