இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் செய்யும் வினோதமான செயல்களுக்கு அளவே இல்லை. உலகில் பல்வேறு வித்தியாசமான செயல்கள் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சமூக வலைத்தளங்கள் வந்ததிலிருந்து ஒவ்வொருவரும் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியவில்லை. சமூக வலைத்தளங்களில் லைக்ஸ் வாங்குவதற்கும் பிரபலமடைவதற்கும் இதெல்லாம் செய்யக்கூடாது என்ற வரைமுறை இல்லாமலே செய்து கொண்டிருக்கின்றனர்.

லைக் வாங்க வேண்டும் என்பதற்காக ஆபத்து உணராமல் பல இடங்களுக்கு சென்று உயிரை விட்டவர்களும் உண்டு. ஒரு சிலர் தங்களையே பைத்தியக்காரர்களாக காட்டிக்கொண்டு லைக்குகள் வாங்கின்றனர். எதற்காக இந்த மோகம் என்றுதான் தெரியவில்லை. அந்த வரிசையில் தான்னை தானே திருமணம் செய்து கொண்டவர்களும் உண்டு.
அதேபோல் இந்தோனேசியாவை சேர்ந்த கொய்ருல் அனம் என்ற இளைஞர் சாப்பாடு செய்யும் ரைஸ் குக்கரை திருமணம் செய்து இருக்கிறார். ரைஸ் குக்கரை மணப்பெண் போல் அலங்காரம் செய்து இவர் திருமண பதிவில் கையெழுத்து போடுவது போன்ற புகைப்படங்கள் வெளியானது.

ரைஸ் குக்கரை முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார் கொய்ருல் அனம் என்ற அந்த இளைஞர். இந்த குக்கர் நான் சொல்வதை கேட்கிறது உணவு செய்து தருகிறது என்று கொய்ருல் அனம் பதிவிட்டிருந்தார். ஆனால் அதற்குப் பிறகு நடந்ததுதான் முக்கியமான விஷயம். அது என்னவென்றால் ரைஸ் குக்கரை திருமணம் செய்த 4 நாட்களில் விவாகரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். அதற்கு காரணம் குக்கர் அரிசி மட்டுமே வேக வைக்கிறது வேறு எதுவும் செய்வதில்லை என்று காரணம் கூறியிருக்கிறார். இதனால் கடுப்பாகி ட்ரெண்ட் ஆகவேண்டும் என்றுதான் இது மாதிரியான முட்டாள் தனமான காரியத்தை செய்து இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கூறினர்.
