MGR படத்துக்கு இசையமைத்து பாடலும் பாடிய இளையராஜா… அப்புறம் என்ன நடந்தது தெரியுமா…?

By admin on ஐப்பசி 12, 2024

Spread the love

MGR தமிழ் சினிமா மறக்க முடியாத நாயகன். மக்கள் மனதில் இன்றளவும் நீங்காத இடம் பிடித்தவர். நடிகராக மட்டுமல்லாமல் மக்கள் மீது அதிக அன்பு கொண்டிருந்தவர். அதனாலேயே அவரை முதலமைச்சராக மக்கள் ஆக்கி அழகு பார்த்தனர். தான் இறக்கும் வரையில் முதலமைச்சராகவே இருந்து மறைந்தவர் MGR. மக்கள் நலனுக்காக அதிக திட்டங்களை வகுத்து சிறப்பான ஆட்சியை நடத்தியவர் MGR.

   

குடும்ப வறுமைக்காக நாடகத்தில் நடிக்க வந்த MGR பின்னர் துணை கதாபாத்திரங்களில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து மிகுந்த போராட்டத்திற்கு பிறகு நடிகராக உயர்ந்தவர். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்த MGR அர்ப்பணிப்புடன் பணியாற்றியாதன் விளைவாக வெற்றி நாயகனாக மாறினார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் தான்.

   

இவைருடன் நடிக்கவே இவரை வைத்து படம் இயக்கவும் தயாரிக்கவும் நடிகைகளும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருவர். தான் வறுமையில் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டதால் அனைவருக்கும் வாரி வழங்கும் கர்ணனாகவே வாழ்ந்திருக்கிறார் MGR.

 

தமிழ் சினிமாவின் இசை ஜாம்னாக திகழ்ந்தவர் இளையராஜா. தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வளர்ந்த சமயத்தில் MGR படத்திற்கு அவர் இசையமைத்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் MGR அரசியலுக்கு வந்த புதிதில் உன்னை விடமாட்டேன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்திருக்கிறார். அந்த படத்தை MGR Pictures நிறுவனம் தயாரிக்க இருந்தது. அந்த படத்தில் இசையமைக்க இளையராஜாவை பரிந்துரை செய்திருக்கிறார் MGR .பின்னர் MGRக்காக ஒரு பாடலை இளையராஜா அவர்களே எழுதியிருக்கிறார்.

அந்தப் பாடலை எப்போதும் எம்ஜிஆர் பாடலை பாடும் டி எம் சௌந்தரராஜனை பாட வைத்திருக்கிறார் இளையராஜா. ஆனால் எம்ஜிஆர் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். அடுத்ததாக மலேசியா வாசுதேவனை பாடலை பாட வைத்திருக்கிறார் அவரையும் வேண்டாம் என்று எம்ஜிஆர் சொல்லி இருக்கிறார். பின்னர் எம்ஜிஆர் இடம் இளையராஜா நான் என்ன செய்ய வேண்டும் அய்யா என்று கேட்டதற்கு நீயே இந்த பாடலை பாடு என்று கூறியிருக்கிறார். ஐயா என்னுடைய குரல் உங்களுக்கு சரி வருமா என்று இளையராஜா கேட்டிருக்கிறார். அதெல்லாம் சரியாக வரும் நீ பாடு என்று கூறி தன் படத்திற்கு இசையமைத்து பாடலையும் பாடவைத்து இருக்கிறார் எம்ஜிஆர். ஆனால் ஒரு சில அரசியல் காரணங்களுக்காக அந்த படம் வெளிவராமல் போனது.