சந்திரபாபு தமிழ் திரையரையில் தலைசிறந்த நகைச்சுவை நடிகராகவும் சிறந்த பாடகராகவும் விளங்கியவர். தூத்துக்குடி கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த சந்திரபாபு நடிகராக வேண்டும் என்ற இலட்சியத்தால் சென்னைக்கு வந்தவர். ஒரு படத்தளத்தில் உள்ளே சென்று வாய்ப்பு கேட்க அனுமதிக்கப்படாததால் தற்கொலைக்கு முயன்ற சந்திரபாபு அதற்குப் பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து சிறந்த நடிகனாக திகழ்ந்தவர் சந்திரபாபு.

கண்ணதாசன் புகழ்பெற்ற தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியரும் கவிஞரும் ஆவார். 4000 மேற்பட்ட கவிதைகள் ஐந்தாயிராத்துக்கும் மேற்பட திரைப்பட பாடல்கள் கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை உலகம், தென்றல், தென்றல் திரை, முல்லை, கண்ணதாசன் ஆகயா இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக பதவி வகித்தவர் கண்ணதாசன்.
தனது பாடல்கள் மூலமாகவே வாழ்க்கைக்கு தகுந்த கருத்துக்களை எல்லாம் கூறிவிடுவார் கண்ணதாசன். இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் ஹிட்டானவைகள் தான். சிவாஜிகணேசன் எம்ஜிஆர் ஆகியோருக்கு பெரும்பாலான பாடல்களை எழுதி இருக்கிறார். அப்படி கண்ணதாசன் பாடல் எழுத சந்திரபாபு நடித்து ஒரு தோல்வி படத்தை வெற்றி படமாக ஆக்கியிருக்கிறார்கள். அது என்னவென்று காண்போம்.

1959 ஆம் ஆண்டு ஏவிஎம் புரொடக்ஷனில் வெளிவந்த திரைப்படம் தான் சகோதரி. இந்த திரைப்படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் கண்ணதாசன் தான் எழுதியிருப்பார். படபிடிப்பு நிறைவடைந்ததும் படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இந்தப் படத்தை பார்த்தபோது இந்த படத்தில் குடும்ப செண்டிமெண்ட் அதிகமாக இருக்கிறது ஆனாலும் ஏதோ ஒன்று குறைகிறது என்று கூறியிருக்கிறார்.
உடனே இயக்குனர் காமெடி காட்சிகளை எழுதி சந்திரபாபுவை நடிக்க வைத்தார். அதன் பிறகு சந்திரபாபுக்காக கண்ணதாசன் ஒரு பாடல் எழுதி அதை சந்திரபாபுவே தனது குரலில் பாடி இருப்பார். அந்த பாடல் பெருமளவு ஹிட் ஆகி அந்த படத்தை ஹிட் படமாக ஆக்கியிருக்கிறது. அதுதான் நான் ஒரு முட்டாளுங்க என்ற பாடல். அது இன்றளவும் அனைவரும் ரசிக்கும் பாடலாக இருந்து வருகிறது.
