சிவகங்கை மாவட்டத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது காரைக்குடி. காரைக்குடிக்கு அருகில் உள்ள செட்டிநாடு என்ற ஊர் அரண்மனை மற்றும் 1000 ஜன்னல் வீடுகளுக்கு பிரபலமானது. இந்த வீடுகளை தமிழ் சினிமாவில் பல படங்களில் நாம் பார்த்திருப்போம். சுந்தரபாண்டியன், தாமிரபரணி போன்ற படங்களை செட்டிநாடு வீடுகளில் படமாக்கி இருப்பர். இந்த செட்டிநாடு வீடுகளில் சிறப்புகள் என்ன வரலாறு என்ன என்பதை இனி காண்போம்.

இந்த செட்டிநாடு அரண்மனையில் மற்றொரு பெயர் கானாடுநாடு காத்தான் அரண்மனை என்பதாகும். இந்த அரண்மனையானது ராஜா அண்ணாமலை செட்டியார் அவர்களால் 1912 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. வேலைப்பாடுகள் நிறைந்த இந்த அரண்மனையில் கட்டுமான பணி ஏழு ஆண்டுகள் நடைபெற்று உள்ளது. இந்த அரண்மனை செட்டியாரின் பாரம்பரிய கட்டிடக்கலையை வெளிப்படுத்துகின்ற வகையில் அமைத்திருக்கிறார்கள்.
செட்டிநாடு மக்களின் கட்டிடக்கலை பாரம்பரியம் பண்பாட்டின் பெருமை ஆகியவற்றை வெளியுலகிற்கு வெளிப்படுத்தும் உதாரணமாக இந்த செட்டிநாடு அரண்மனை அமைந்திருக்கிறது. இந்த அரண்மனையில் அலங்கார விளக்குகள், தேக்குமர சாமான்கள், பளிங்குகள், கண்ணாடிகள், கம்பளங்கள், ஸ்படிகங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு கட்டப்பட்டிருக்கிறது.
காரைக்குடி, பள்ளத்தூர், ஆத்தங்குடி, கோதமங்கலம், செட்டிநாடு பகுதிகளில் காணப்படுகின்ற வீடுகள் மிகுந்த வேலைபாடு கொண்டவைகளாக அமைந்துள்ளது. அவற்றில் பல வீடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட உயர்வகை மரங்கள் கண்ணாடி வேலைப்பாடுகளை வைத்து கட்டப்பட்டு பிரபலம் ஆனது தான் செட்டிநாடு அரண்மனை. இந்த அரண்மனையில் அகழ்ந்த தாழ்வாரம், கிரானைட் கல்லால் செய்யப்பட்ட பெரிய தூண்கள் இருக்கின்றன. வீட்டில் முன்புறம் அனைவரையும் வரவேற்கும் வகையில் நுழைவு வாசலில் விசாலமான திண்ணை மரத்தூண்கள் போன்றவை இருக்கிறது. பர்மா உள்ளிட்ட வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட தேக்கு மரப்பலகில் கதவுகளும் ஜனங்களும் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த செட்டிநாடு அரண்மனையில் அரச குடும்பத்தினர் பயன்படுத்திய விலை உயர்ந்த பழமையான பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த வீடு பெரிய மண்டபம் போல் இருக்கும். சினிமா சூட்டிங் மட்டுமல்லாது இந்த செட்டிநாடு அரண்மனையை இப்போது அனைவரும் வந்து இவர்களது கட்டிடக்கலை ரசிக்கும்படியாக விருந்தினர் மாளிகையாக அமைத்திருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் சென்று அங்கிருக்கும் பிரம்மாண்டங்களை கண்டு ரசிக்கலாம்.
