சிறு வயது முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது தின்பண்டங்கள். சூடான டீயுடன் வடை சமோசா பதார்த்தங்கள் வைத்து சாப்பிட்டால் சொர்க்கமே கண்முன் வரும். இந்த பிறப்பு தான் ருசித்து சாப்பிட கிடைத்தது என்பது போல பலர் விரும்பியதை சாப்பிட்டு வாழ வேண்டும் என்று நினைப்பர். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் வெளியில் கடையில் ஏதும் நம்பிக்கையோடு வாங்கி சாப்பிட முடியவில்லை.

அதற்கு காரணம் உணவில் கலப்படம். உணவில் கலப்படம் போக உணவை தயார் செய்யும் உணவகங்ளில் கெட்டுப் போன பழைய பொருட்களை வைத்து பதார்த்தங்களை தயார் செய்து பணத்துக்காக மக்களின் உடல் நலனோடு விளையாடுகிறார்கள். என்னதான் கடையை ஆக்கிரமித்து சீல் செய்து ஒரு பக்கம் நடந்தாலும் ஒரு பக்கம் எல்லாம் சரியாகி விட்டதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு இடத்திலும் உணவகங்களில் கலப்படம். சாப்பாட்டில் ஏதாவது பூச்சி போன்றவை விழுந்து கிடப்பது போன்றவை இருக்கத்தான் செய்கிறது. அதை ஒவ்வொரு நாளும் வீடியோ எடுத்து சமூகவலைதாளங்களில் போட தான் செய்கிறார்கள். அதேபோல் தற்போது சமோசாவை வைத்து ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. சமோசா பிரியர்களுக்கு இது அதிர்ச்சி செய்தியாகவே இருக்கும்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு உணவகத்தில் வழங்கப்பட்ட சமோசாவில் சிலந்தி இறந்து கிடந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதே போல மற்றொரு உணவகத்தில் சமோசாவிற்குள்ளே தவளையின் கால் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதை பார்த்த சமோசா பிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர். கொடுக்கும் பணத்திற்கு இப்படியெல்லாம் ஏமாற்றி விற்பனை செய்கிறார்களே என்று மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.
