தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்தார். இந்த படம் மாபெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தியில் மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழியில் கங்குவா திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இதுவரை கங்குவா படம் 400 கோடி ரூபாய் மேல் பிசினஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான தனது 44-வது திரைப்படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். சூர்யா தொடர்பான அனைத்து காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டது.

இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மற்ற கலைஞர்கள் வரும் காட்சியை கார்த்திக் சுப்புராஜ் படமாக்க உள்ளார். சூட்டிங் முடிவடைந்ததை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியாக தெரிவித்தார். மேலும் கார்த்திக் சுப்புராஜ் வாழ்நாள் முழுவதும் எனது சகோதரனாக உருவாகியுள்ளார்.

#image_title
இந்த படத்தின் மூலம் மறக்க முடியாத அனுபவத்தை தந்த படம் குழுவிற்கு மிக்க நன்றி என சூர்யா பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜிடம் சமீப காலமாக எனது படங்கள் பல்வேறு தடங்கல்களை சந்திக்கிறது. சரியாக ஷூட்டிங் நடக்காமல் தாமதமானது. ஆனால் இந்த படத்தில் தான் மன நிறைவாக மகிழ்ச்சியாக சூட்டிங் முடிவடைந்தது என கூறினாராம்.
