பிரபல நடிகரான விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்துள்ளார். ஹீரோவாக இருந்தாலும் சரி வில்லனாக இருந்தாலும் சரி விஜய் சேதுபதி நடிப்பு மிரட்டலாக இருக்கும். இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா படத்தை நெத்திலி சுவாமிநாதன் இயக்கினார். இந்த படத்தில் நடராஜ், முனிஸ் காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்தனர். மகாராஜா கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மகாராஜா படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த நிலையில் மகாராஜா திரைப்படம் netflix ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி மாஸ் காட்டியது. இந்தியாவில் மகாராஜா திரைப்படத்தை ஓடிடியில் அதிக நபர்கள் பார்த்ததாக சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் தயாரிப்பாளரும் விஜய் சேதுபதியும் இணைந்து மகாராஜா பட இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனுக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசாக கொடுத்துள்ளனர். அவருக்கு மட்டும் இல்லாமல் படத்தில் நடித்த முக்கிய பிரபலங்களுக்கு ஐபோன் 16 சீரிசை கிப்டாக கொடுத்துள்ளனர். அடுத்த நிலையில் இருக்கும் கலைஞர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்துள்ளார்களாம். அது மட்டும் இல்லாமல் படத்தின் வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் சிறு சிறு பரிசுகளை கொடுத்துள்ளனர்.

